ஊழலற்ற தலைவர் எனப்பெயர் பெற்ற மாணிக் சர்க்கார் பதவி விலகினார்!

திரிபுராவில் முதலமைச்சராக இருந்த மாணிக் சர்க்கார், தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் நிலையில், பதவி விலகினார்.

நடந்து முடிந்த திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் ஐபிஎப்டி(IPFT) கட்சியுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க போட்டியிட்டது. இதில் பா.ஜ.க. மட்டும் தனியாக 35 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 16 இடங்கள் மட்டுமே கிடைத்தது. 25 ஆண்டுகள் இடதுசாரிகள் வசம் இருந்த திரிபுராவை பா.ஜ.க. தற்போது கைப்பற்றியுள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சராக இருந்த மாணிக் சர்க்கார், தலைநகர் அகர்தலாவில் உள்ள ஆளுநர் மாளிகை சென்று பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் டதாகதா ராயிடம் ((Tathagata Roy)) வழங்கினார். 1998ஆம் ஆண்டு முதல் திரிபுராவின் முதலமைச்சராக இருந்த மாணிக் சர்க்கார் ஊழலற்ற தலைவர் எனப்பெயர் பெற்றவர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment