ஊரடங்கு சமயங்களில் அதிகாரிக்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகள்! இந்த எண்ணுக்கு அழையுங்கள் – நடிகை வரலட்சுமி

ஊரடங்கு சமயங்களில் அதிகாரிக்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் விதத்தில், நடிகை வரலட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு சமயங்களில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், நடிகை  வரலட்சுமி, பெண்களுக்கு எதிரான குற்றங்களிலிருந்து பெண்களை காப்பாற்றும் விதத்தில், 18001027282 … Read more

பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதலாக ரூ.6,200 கோடி.! ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு .!

வரும் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.6,200 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், கடந்த மார்ச் 24 முதல் முழு ஊரடங்கு அமலில்உள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி,  நுழைவுத் தேர்வுகள், உள்ளிட்ட அனைத்து ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஊரடங்கு முடிந்த உடன் வரும் கல்வி ஆண்டில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய நேற்று, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் … Read more

என்னமோ நடக்குதுங்க! கடவுளை கும்பிடுங்க – நடிகர் வடிவேலு

காவல்துறைக்கு ஆதரவு அளிக்குமாறு வீடியோ வெளியிட்ட நகைசுவை நடிகர் வடிவேலு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை  கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களை, காவல்துறையினர் கண்டிக்கவும் செய்கின்றனர். பிரபலங்கள் பலரும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிற நிலையில், நகைசுவை நடிகர் வடிவேலு, இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுளளார். அந்த வீடியோவில், ‘என்னமோ … Read more

பால்கனி அரசுகள் தெளிவான முடிவெடுக்கவேண்டும் -கமல்ஹாசன்

பால்கனி அரசுகள் தெளிவான முடிவெடுக்கவேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக முதலில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன் பின்னர் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.ஆனால் இதன் விளைவாக நாடு முழுவதும் அனைத்து தொழில்களும் முடங்கியது.வேலையின்றி வீட்டிலேயே அனைவரும் முடங்கி உள்ளனர்.இதற்குஇடையில்  அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஜூலை 2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்தது .இதற்கு முன்னரே மத்திய அரசும் அகவிலைப்படி உயர்வை நிறுத்தி … Read more

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி  ஆலோசனை

இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி  ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக முதலில் ஏப்ரல் 14 -ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன் பின்னர் ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.எனவேமே 3-ஆம் தேதியுடன் முடிவடையுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனையில் ஒரு சில மாநில முதலமைச்சர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.இதற்கு பிரதமர் மோடி மே … Read more

இந்தியாவுக்கு உதவிய ஆசிய வளர்ச்சி வங்கி.! ரூ.11,387 கோடி கடனுதவி.!

இந்தியாவுக்கு உதவும் வகையில் ரூ.11,387 கோடி கடனுதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனவால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மற்றும் கொரோனா தடுப்பு பணிக்கு உதவும் வகையில் ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.11,387 கோடி கடனுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருவதால் 2 ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மே 3 ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் ஊரடங்கு மேலும் … Read more

சென்னையில் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு தொற்று.!

சென்னையில்,இன்று 103 பேருக்கு உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 673 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில், இன்று 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,058 உயர்ந்துள்ளது. இன்று ஒருவர் உயிரழந்துள்ளார். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 27 பேர் குணமடைந்துள்ளனர், இதுவரை குணமடைந்தவர்கள் 1128 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 121 பேரில், சென்னையில் இன்று மட்டும் 103 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. … Read more

தமிழகத்தை விடாமல் துரத்தும் கொரோனா.! இன்று ஒரே நாளில் 121 பேருக்கு பாதிப்பு.!

தமிழகத்தில் இன்றும் மேலும் 121 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 121 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 1,937 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்றும் மட்டும் 27 பேர் வைரஸில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை 1,128 பேர் வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  … Read more

ஊரடங்கு உத்தரவால் தாயின் இறுதி சடங்கை வீடியோக்காலில் பார்த்து கதறி அழுத ராணுவ வீரர்!

ஊரடங்கு உத்தரவால் தாயின் இறுதி சடங்கை வீடியோக்காலில் பார்த்து கதறி அழுத்த ராணுவ வீரர். கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவசரத் தேவைக்குக் கூட, வெளி மாநிலங்களில் இருந்து  வரவோ, அல்லது இங்கு இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லவோ  இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்த புக்கம்பட்டி, அழகா கவுண்டன் ஊரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி மாது(65). இவர்களது மகன் சக்திவேல்(42). … Read more

ஜூன், ஜூலையில் பாதிப்பு அதிகமாக இருக்கும்.!

நேற்று முதல்வர்களுடனான பிரதமரின் உரையாடல் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கையால் பல ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்றபட்டுள்ளது. பிரதமருடன் பேசிய முதலமைச்சர்கள் சர்வதேச எல்லையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.  இந்நிலையில், இந்த ஆலோசனைக்கு பின் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அளித்த பேட்டியில், பிரதமருடன் கலந்துரையாடிய பெரும்பாலான முதல்வர்கள் ஊரடங்கை தொடர வேண்டும் என்று வலியுறுத்தினர். சில பொருளாதார … Read more