பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதலாக ரூ.6,200 கோடி.! ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு .!

வரும் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.6,200 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், கடந்த மார்ச் 24 முதல் முழு ஊரடங்கு அமலில்உள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி,  நுழைவுத் தேர்வுகள், உள்ளிட்ட அனைத்து ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், ஊரடங்கு முடிந்த உடன் வரும் கல்வி ஆண்டில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய நேற்று, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில், அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள்,  செயலாளர்கள் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்றனர்.

பின்னர்  பேட்டி அளித்த அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ,  வீடுகளில் முடங்கிய மாணவர்களுக்கு, மதிய உணவுக்கு பணம் மானியமாக வழங்கப்படும். ஏற்கனவே வழங்கப்படும் மதிய உணவுத் திட்ட நிதியில் இருந்து 10.99% நிதி உயர்த்தப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் குழந்தைகளை எல்லா நேரங்களிலும் படிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தக் கூடாது. அதேநேரம் , தேர்வுகள் நடைபெறும் நேரத்தில் மாணவர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

author avatar
murugan