ஜூன், ஜூலையில் பாதிப்பு அதிகமாக இருக்கும்.!

நேற்று முதல்வர்களுடனான பிரதமரின் உரையாடல் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கையால் பல ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்றபட்டுள்ளது.
பிரதமருடன் பேசிய முதலமைச்சர்கள் சர்வதேச எல்லையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.  இந்நிலையில், இந்த ஆலோசனைக்கு பின் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அளித்த பேட்டியில், பிரதமருடன் கலந்துரையாடிய பெரும்பாலான முதல்வர்கள் ஊரடங்கை தொடர வேண்டும் என்று வலியுறுத்தினர். சில பொருளாதார நடவடிக்கைகள் மெதுவாக தொடங்கும் எனவும் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் பல்வேறு பகுதியில் சிக்கித் தவிக்கும் பிற மாநில மக்களின் பிரச்சினைக்கு பிரதமர் முடிவு எதையும் தெரிவிக்கவில்லை. பொது மக்களுக்கு நிதி உதவி அளிப்பது அல்லது விவரங்களை தருவது தொடர்பாக எந்த உறுதிமொழியும் அவர் தரவில்லை என கூறினார்.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டீஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சர் டி எஸ் சிங் தியோ  கூறுகையில்,  ஜூன்-ஜூலை பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்ததாகவும், அதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவித்ததாகவும் டி எஸ் சிங் தியோ  தெரிவித்தார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.