அதிக வழக்கு தேவேந்திர பட்னவிஸ் முதலிடம் …..அதிக சொத்து சந்திரபாபு நாயுடு முதலிடம்…….

ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு இந்தியாவில் அதிக சொத்துடைய முதலமைச்சர்கள் பட்டியலில் முதலிடமும்  , அதிக வழக்குகளுடைய முதலமைச்சர்கள் பட்டியலில் மகாராஷ்டிராவின் தேவேந்திர பட்னவிசும் முதலிடத்தில் உள்ளனர். ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் என்ற அமைப்பு, மாநில முதலமைச்சர்களின் சொத்து விவரம் மற்றும் அவர்கள் மீதான வழக்குகளை பட்டியலிட்டுள்ளது. அதில், 177 கோடி ரூபாய் சொத்துகளுடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முதலிடத்திலும், 129 கோடி ரூபாய் சொத்துகளுடன் அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா கண்டு 2வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் … Read more

பயத்தில் மனோகர் பாரிக்கர்!பெண்கள் மது அருந்துதால் கலக்கம் …..

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் பெண்களும் மது அருந்தத் தொடங்கியுள்ளது தமக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக  தெரிவித்துள்ளார். கோவாவில் இளைஞர் நாடாளுமன்றம் என்ற மாணவர் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தாம் பள்ளி மற்றும் கல்லூரி பயின்ற காலத்தில், தம்முடன் பயின்ற ஒரு பிரிவினர் போதைக்கு அடிமையாகியிருந்ததாக நினைவு கூர்ந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ல் போதை மருந்து பயன்படுத்திய 170 பேர், தமது உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பெண்களும் மது அருந்துவது தமக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், … Read more

அமெரிக்காவின் அழுத்தத்தால் வடகொரியாவிற்கு வெற்றி!

வடகொரிய தற்போது பல்வேறு விதமான அணு ஆயுத சோதனைகள் நடத்திவருவதால் பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை வாங்கியுள்ள நிலையில் தற்போது அதற்க்கு ஆதரவாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார் . வட கொரியா கடுமையான அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து வந்துள்ளது ஆனால் தற்போது அந்த நாடு அசுர வளர்ச்சியடைந்துள்ளது. வட கொரியா அமெரிக்காவின் அழுத்தத்தால் மட்டுமே  வெற்றிகரமாக பாதுகாக்கப்பட்டுள்ளது’ என்று கேரள  முதல்வர் பினராய் விஜயன்  கோழிக்கோட்டில் மாவட்டக் கூட்டத்தில் தெரிவித்தார். source: dinasuvadu.com

ஆந்திர மக்களுக்கு புத்தாண்டு புது திட்டத்தை அறிவித்துள்ளது அம்மாநில அரசு…!!

ஆந்திர பிரதேச அரசு வரும் புத்தாண்டு முதல் அமல்படுத்தவிருக்கும் திட்டத்தில் 149 ருபாய் கட்டணத்தில் டிஜிட்டல் தொலைக்காட்சிகள், வரம்பு இல்லாத தோலை பேசி அழைப்புகள் மற்றும் பிராட் பேண்ட், வை பை முதலான சேவைகள் அனைத்தையும் பெறலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

குஜராத் முதல்வராக விஜய் ருபானி பதவியேற்பு: பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் 18 மாநில முதல்வர்கள் பங்கேற்பு!

குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்ததை தொடர்ந்து, மாநிலத்தின் முதல்வராக விஜய் ருபானி (61) , துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் 18 அமைச்சர்கள் நேற்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர். தலைநகர் காந்திநகரில் உள்ள புதிய தலைமைச் செயலக வளாகத்தில் பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் குஜராத்தின் 16-வது முதல்வராக விஜய் ருபானி பதவியேற்றார். இவருடன் துணை முதல்வர் நிதின் படேல் உட்பட 19 அமைச்சர்கள் பதவியேற்றனர். இவர்களுக்கு மாநில ஆளுநர் ஓம் பிரகாஷ் … Read more

பத்மாவதி படத்தை திரையிட மே.வங்க முதலமைச்சர் ஏற்பாடு!

பத்மாவதி படத்தை பெருமளவில் ஹிந்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த படம் சித்தூர் பகுதியை ஆண்ட ராணி பத்மினி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கபட்டுள்ளது. மத்தியப்பிரதேசம்,  உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் இந்த படத்தை நாங்கள் வெளியிட அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். தற்போது மேற்கு வங்காளம் மாநிலத்தில் பத்மாவதி படத்தை வெளியிட ஏற்பாடுகள் செய்து தருவோம் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நவீனமயம் படுத்தப்படும் கேரள அரசுப் பள்ளிகள்!

  கேரள இடது முன்னணி அரசாங்கத்தின் ஹைடெக் பள்ளி திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 20,000 அரசு நிதியில் செயல்படக்கூடிய அரசுப் பள்ளிகள் டிஜிட்டல்மயமாக்கப்படவுள்ளன. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்துவரும் இடது முன்னணியின் ஆட்சி, சமூக நீதியை நிலைநாட்டுவதில் முன்னோடியாக விளங்கி வருகிறது. தற்போது கல்வித் துறையிலும் புதிய திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அரசுப் பள்ளிகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தில் அது இறங்கியுள்ளது.கேரள கட்டமைப்பு மற்றும் தொழில் கல்வி என்ற … Read more

கார்டூனிஸ்ட் பாலா வான்டடு லிஸ்டில்

சமிபத்தில் நெல்லையில் கந்துவட்டிக்கு எதிராக தீக்குளித்து இறந்த குடும்பத்தினருக்கு நிகழ்ந்த அநிதியை கண்டு கோபப்பட்டு கார்டூனிஸ்ட் பாலா ஒரு கேலிசித்திரம்  வரைந்தார்.கார்டூனிஸ்ட் பாலா வரைந்த சித்திரம் அவதூறு செய்வது போல அமைந்தாக கூறி மாவட்ட ஆட்சியர் நந்தூரி அளித்த புகார் கொடுத்ததை அடுத்து, பாலாவை கைது செய்தனர் இதையடுத்து, சென்னையில் கார்டூனிஸ்ட் பாலாவை கைது செய்த போலீசார், நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது பாலா தரப்பில் ஜாமின் … Read more