கொரோனா வைரஸ்.! ஒரே நாளில் 43 பேர் பலி.! சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை .!

இன்று காலை வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவி  ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ்  கண்டுபிடிக்கப்பட்டது.தற்போது இந்த கொரோனா வைரஸ் சீனாவில் பல மாகாணங்களில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த பாதிப்பால் தினமும் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இன்று காலை வரை கொரோனா வைரஸ் … Read more

#BREAKING :இந்தியாவுக்கு வந்தது கொடிய கொரோனா வைரஸ் ! சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவருக்கு வைரஸ் தாக்கம்

கொரோனா வைரஸின் தாக்கத்தால் சீனா உருக்குலைந்து வரும் நிலையில்,அதை கட்டுப்படுத்த அங்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில்  சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தற்போது புதியதாக  “ கொரோனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.இந்த காய்ச்சல் முதலில் அந்நாட்டில் உள்ள உகான்  நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற நகரங்களிலும் பரவி … Read more

தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா.! நேற்று 132 பேர் … இன்று 170 ஆக உயர்ந்த பலியானோரின் எண்ணிக்கை .!

 கொரோனா வைரஸ்  சீனாவில் பல மாகாணங்களில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று காலை நிலவரப்படி பலியானோரின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனாவைரஸ்  கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த கொரோனா வைரஸ்  சீனாவில் பல மாகாணங்களில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று வரை 132 இறந்த நிலையில்  பலியானோரின் எண்ணிக்கை 38 அதிகரித்து இன்று … Read more

கொரனா வைரஸ் :நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பலியானோரின் எண்ணிக்கை.! 132 ஆக உயர்வு .!

சீனாவில் கொரனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று காலை நிலவரப்படி பலியானோரின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் காய்ச்சலால் 5,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சீனாவில் கொரனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று காலை நிலவரப்படி பலியானோரின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. சீனா முழுவதும் 5,000-க்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சீனாவில் தற்போது புதியதாக  “கொரனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் … Read more

உயிருடன் இருக்கும் ‘குட்டி எலிகளை’ சாப்பிடும் விசித்திர இளைஞர்.! வைரலாகும் வீடியோ.!

சீனாவில் திரி ஸ்ஹூக்ஸ் (Three Squeaks) என்ற உணவு வகை அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது, உயிருடன் இருக்கும் மூன்றுக்கும் மேற்பட்ட எலிக்குட்டிகளை சாஸில், நனைத்து அப்படியே சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில், வாடிக்கையாளர் ஒருவர், உணவு விடுதியில் எலி குட்டிகளை சாஸில் நனைத்து சாப் ஸ்டிக் மூலம் உண்ணும் வீடியோ ஒன்று இணையத்தில் வைராலாகி வருகின்றது. வெளிநாடுகளில் அவ்வப்போது வீடுகளில் விசித்திரமான உணவுகள் சமைத்தும் அல்லது ஹோட்டல்களுக்கு பொதுமக்கள்கள் சென்று  அதுபோன்ற வித்தியாசமான உணவுகளை … Read more

கொரோனாவால் சீரழிந்து கொண்டிருக்கிறது சீனா..! இக்கட்டான நிலையில் நாடு..!உரைத்தார் அதிபர்

சீனா  இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறது அதிபர் ஜீ ஜின்பிங்  கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதாக தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு  56 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இந்நிலையில் நிலையில் சீனா நாட்டை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ நிலைக்குழு கூட்டத்தில் பேசிய அந்நாட்டு ஜீ ஜின்பிங் வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரசால் நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை வலுப்படுத்த வேண்டிய … Read more

சீனா அரசு அதிரடி .! 10 நாள்களில் 25,000 சதுர மீட்டரில் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை..!

இன்று  கொரோனா வைரஸ் காய்ச்சலால் 13 பேர் பலியாகி பலியானோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 1,500 பேருக்கு மேல் பாதிப்படைந்து உள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  சிகிச்சை கொடுக்க சீனா முடிவு செய்து ஒரு புதிய மருத்துவமனை கட்டி வருகிறது. சீனாவில் “கொரனா வைரஸ்” காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் முதலில் அந்நாட்டில் உள்ள வூஹான் நகரில் இருந்து பரவியது.தற்போது அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் இந்த  வைரஸ் … Read more

தனது வீரியத்தை ஒலிம்பிக்கிலும் காட்டிய கொரோனா வைரஸ்..! ஒலிம்பிக் தகுதிப்போட்டிகள் ரத்து.!

சீனாவை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அந்நாட்டில் நடைபெற இருந்த ஒலிம்பிக் தகுதிப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுறுசுறுப்புக்கு பெயர் போன ஜப்பான் நாட்டில் இந்தாண்டு வரும் ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் கோலகலமாக துவங்கி நடைபெற உள்ளன. இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் தகுதிச் சுற்றுப் போட்டிகள்  தற்போது நடந்து வருகின்றது. இந்நிலையில் சீனாவில் வூகான் பகுதியில் கரோனா வைரஸ் … Read more

மக்களே உஷார்..! நாடு விட்டு நாடு தாவும் புதிய வைரஸ்.! மேலும் ஒருவர் பலி.!

சீனாவில் தற்போது புதியதாக பரவி வரும் நோய் “கொரனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல். இந்த காய்ச்சலால் இதுவரை 3 பேர் உயிரிழந்தது நிலையில் மேலும்  ஒருவர் உயிரிழந்து உள்ளார்.  சீனாவில் தற்போது புதியதாக பரவி வரும் நோய் “கொரனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல். இந்த காய்ச்சல் முதலில் சீனாவின் மத்திய நகரான வூஹானில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகரில் மொத்தமாக ஒரு கோடியே 10 லட்சம்பேர் வசித்து வருகின்றனர். இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் … Read more

BMW கார் மற்றும் விலை உயர்ந்த வீட்டை காதலனுக்கு பரிசளித்து ஷாக் கொடுத்த காதலி.!

சீனாவில் காதலனை சந்தோசப்படுத்த, BMW கார் மற்றும் அழகிய வீடு ஒன்றை காதலி பரிசளித்தது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. காதலித்து ஓராண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, தன் காதலனுக்கு விலை உயர்ந்த பரிசை அளிக்க திட்டமிட்டுள்ள சீன பெண். காதலன் காதலி மீது, காதலி காதலன் மீது அன்பை வெளிப்படுத்த, காதலர்கள் அவ்வப்போது பரிசுப் பொருட்களை பகிர்ந்துகொள்வர்கள். அதில், குறிப்பிட்ட சில புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி,பார்ப்பவரின் மனதை அதிர்ச்சியாக்கும். இந்நிலையில், தற்போது … Read more