“மத்திய அரசு நாளை அறிமுகப்படுத்தவுள்ள மசோதா;ஜனநாயகத்துக்கு ஆபத்தானது” – எம்.பி.ரவிக்குமார்!

நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகப்படுத்தப்படவிருக்கிற ‘தேர்தல் சட்டம் (திருத்தம்) மசோதா 2021’ ஆனது தேர்தல் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது,உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.அதை அறிமுகப்படுத்த வேண்டாம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று எம்.பி.ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய அரசு நாளை (20.12.2021) அறிமுகப்படுத்தவுள்ள தேர்தல் சட்ட திருத்த மசோதா 2021-க்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்து நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் அளித்துள்ளதாகவும்,இந்த மசோதா தேர்தல் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது,உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.அதை அறிமுகப்படுத்த வேண்டாம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் … Read more

“மத்திய அரசே… இத்திட்டத்தை கைவிடு” – விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்!

பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் திட்டத்தை இந்திய ஒன்றிய அரசு கைவிடவேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும்,நாளையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடந்து வரக்கூடிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் வங்கி சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ய அரசு … Read more

“விவசாயிகளின் சிக்கலுக்கு தீர்வு காண மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை” – டாக்டர்.ராமதாஸ் வருத்தம்!

பொட்டாஷ் விலை உயர்வு,தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் சிக்கலுக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகளின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது வருத்தமளிப்பதாகவும்,அனைத்து உரங்களுக்கும் நிலையான விலையை நிர்ணயித்து, வேறுபாட்டுத் தொகையை உர நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கும் பழைய திட்டத்தையே மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது … Read more

தமிழக அரசுக்கு 2 விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளது மத்திய அரசு!

தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்காக 2 விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது மத்திய அரசு. தமிழ்நாடு அரசு செயல்பாடுகளுக்காக 2 விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. தொற்றா நோய்களுக்காக 29.88 லட்சம் பரிசோதனை செய்ததில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் என்றும் ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துவதற்காக 85,514 அமர்வுகளை நடத்தி தமிழக அரசு மூன்றாம் இடம் பிடித்துள்ளது எனவும் கூறப்படுகிறது.

“இது மன்னிக்க முடியாத குற்றம்;மத்திய,மாநில அரசுகளே வேடிக்கை பார்க்காதே” – பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்!

ஆரோவில் காடுகள் அழிக்கப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள ஆரோவில் நகரத்தில் 500 பெரிய மரங்களை வெட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு, ஆரோவில் நகரத்தில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க ஆணையிட வேண்டும் மற்றும் தமிழக அரசும் இதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இது … Read more

700 விவசாயிகள் உயிரிழப்பு : மத்திய அரசு இழப்பீடு தராதது ஏன்…? ராகுல் காந்தி!

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு 700 மத்திய அரசு இழப்பீடு தராதது ஏன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் குறித்து தனது கருத்தை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசியுள்ளார். அதில், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் ஓராண்டு காலமாக … Read more

#Breaking: 3 வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் தேதி – மத்திய அரசு அறிவிப்பு!

நவ.29 ஆம் தேதியன்று 3 வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பல மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து,பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் … Read more

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்த அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் – மத்திய குழு!

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்த அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என மத்திய குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல பகுதிகளில் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இந்த வகையில் வட கிழக்கு பருவ மழை குறித்த பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை … Read more

“ஏழைகளுக்கு மிகப்பெரிய வரம்;ஆனால்,லாப வேட்டைக்காடாக வாய்ப்பு”-மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

தமிழகம்:ரயில்கள் தனியார்மயத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இரயில்களை தனியார்மயமாக்கும் முயற்சி தோற்றதாகவே இருக்கட்டும்,மீண்டும் அந்த முயற்சியை மத்திய அரசு தொடங்கக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தெற்கு ரயில்வேத்துறை சார்பில் தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டிலிருந்தும் இயக்கப்படும் 13 விரைவு ரயில்களை தனியார்மயமாக்கும் முயற்சிகள் வெற்றிபெறவில்லை. இதன்மூலம் ரயில் சேவையை ஏழை மற்றும் நடுத்தர மக்களிடமிருந்து தட்டிப் … Read more

“இரவில் இவற்றை நடத்தலாம்;ஆனால்,வீடியோ பதிவு கட்டாயம்” – மத்திய அரசு அனுமதி!

இரவில் உடற்கூராய்வுகளை நடத்த அனுமதி.ஆனால்,அவற்றை கட்டாயம் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நமது நாட்டில் விபத்துகளில் இறந்தவர்களின் உடல்கள் பொதுவாக பகல் நேரங்களில் மட்டுமே பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தன.இந்நிலையில்,மத்திய அரசு நேற்று பிரேத பரிசோதனைகளுக்கான (உடற்கூராய்வு) நெறிமுறைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.அதன்படி,உடல் உறுப்பு திருட்டை தடுக்க இரவு நேர பிரேத பரிசோதனைகளுக்கு வீடியோ பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக,மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “உடல் உறுப்பு திருட்டை … Read more