700 விவசாயிகள் உயிரிழப்பு : மத்திய அரசு இழப்பீடு தராதது ஏன்…? ராகுல் காந்தி!

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு 700 மத்திய அரசு இழப்பீடு தராதது ஏன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் குறித்து தனது கருத்தை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசியுள்ளார். அதில், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் ஓராண்டு காலமாக … Read more

தொடங்கியது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் …!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்பொழுது தொடங்கியுள்ளது, முதல் நாளான இன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்ப்பு. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடர் இன்று முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை நடக்க உள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி நடக்க உள்ள இந்த கூட்டத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என ஏற்கனவே மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் … Read more

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவு….!

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி டில்லி சலோ என்ற அறைகூவல் உடன் விவசாயிகள் போராட்டம் ஒன்றை தொடங்கினார். இந்த போராட்டத்தின் ஆரம்பத்திலேயே மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பல கட்டமாக நடத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது. அதன் பின் விவசாயிகள் ரயில் … Read more

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு : நாடு முழுவதும் இன்று பாரத் பந்த்!

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளதால், நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து டெல்லியில் விவசாயிகள் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாயிகளுடன் மத்திய அரசு 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இருப்பினும் எந்த ஒரு முடிவும் இதன்மூலம் கிடைக்கவில்லை. வேளாண் சட்டங்களை அடுத்த … Read more

#Breaking:சட்டப் பேரவையில் பாஜக வெளிநடப்பு…!

சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது வெளிநடப்பு செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 9 மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும், இதற்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் … Read more

விவசாயிகளுக்கு துணை நிற்கும் இசையமைப்பாளர்..!

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த ஆறு மாதங்களாக வேளாண் சட்டங்களை விலக்க கூறி போராடி வருகின்றனர். கொரோனா காலங்களிலும் இவர்கள் போராடி கொண்டிருப்பதை பார்த்து  இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ட்வீட் ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், வெளியே போக அஞ்சும் இந்த கொரோனா காலத்திலும் சாலைகளிலேயே ஆறு மாத வாழ்க்கையை வாழ்ந்த விவாசாயிகள் என்று விவசாயிகளின் போராட்டத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய அரசு அறிவித்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெரும் வரை … Read more

விவசாய சட்டங்களை திரும்பப்பெறுவதே விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு – ப. சிதம்பரம்

ஆறு மாதங்களாக விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதே என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று பிரதமர் மோடி பதவி ஏற்று 7 ஆண்டுகள் முடிவடைகிறது. அதனால் இந்நாளை கருப்பு … Read more

“வேளாண் சட்டங்களை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க வேண்டும்”- பாபா ராம்தேவ் வலியுறுத்தல்!

வேளான் சட்டங்களை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்து, விவசாயிகளின் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருமாறு மத்திய அரசிடம் யோகா குரு பாபா ராம்தேவ் வலியுறுத்தினார். அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், 80-க்கும் மேற்பட்ட நாட்களாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு அரசியல் கட்சிகள் உட்பட பலரும் வலியுறுத்தி வருகின்றனர். … Read more

அஸ்திவாரத்தையே அழிக்கிறது உங்கள் சட்டங்கள்..ராகுல் சரமாரி தாக்கு

புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் அஸ்திவாரத்தையே பலவீனமாக்கிவிட்டது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  தெரிவித்துள்ளார். . இது குறித்து கூறிய ராகுல் காந்தி மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் புதிய வேளாண் சட்டங்கள் அனைத்தும் நாட்டின் அஸ்திவாரத்தை பலவீனமாக்கும். எனவே விவசாயிகள் நலன் கருதி  அச்சட்டங்களை பிரதமர் மோடி மறுபரிசீலனை செய்யவேண்டும். கொரோனாப் பரவலில் நாடு கடினமான சூழல்களை சந்தித்துவரும் வேளையில், சமூகத்தின் எளிய பிரிவினரான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள், சிறுதொழில்புரிவோர்கள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட … Read more

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் அரசு தீர்மானம்…

மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள  வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுதும் கடும் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில் பஞ்சாப் அரசு மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக மசோதாக்களைத் தாக்கல் செய்ததோடு தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது. நேற்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 3 வேளாண் சட்டங்களை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறும்போது, வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசு … Read more