மதுரையில் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு !

மதுரை எம்.ஜி.ஆர் ( மாட்டுத்தாவணி ) பேருந்து நிலையத்திலிருந்து, பெரியார் பேருந்துநிலையம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்துக் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பேருந்தின் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், பேருந்தின் கண்ணாடி குத்தியதில் ஓட்டுநர் குடியரசு கையில் காயம் ஏற்பட்டது. பயணிகளுடன் பேருந்து சென்றபோது இச்சம்பவம் நடை பெற்றுள்ளது. கிளை மேலாளர் சுந்தர் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த ஓட்டுநர் … Read more

போக்குவரத்து ஊழியர்களின் ஸ்டிரைக்கால் சென்னையில் குறைந்தளவு பேருந்துகளே இயக்கம்…!!

போக்குவரத்து ஊழியர்களின் ஸ்டிரைக்கால் சென்னையில் குறைந்தளவு பேருந்துகளே இயக்கப்படுகிறது. திருவான்மியூரில் உள்ள மொத்தம் 106 பேருந்துகளில் வெறும் 39 பேருந்துகளும், தாம்பரத்தில் உள்ள 190 பேருந்துகளில் வெறும் 58 பேருந்துகளும், குரோம்பேட்டையிலிருந்து செல்லும் 200 பேருந்துகளில் வெறும் 45 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்,ஆகையால் தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற முன்வரவேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசை வேண்டுகின்றனர்.

அண்ணா தொழிற்சங்கங்கள் மூலம் பேருந்து இயக்க திமுக செயல்தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசு போக்குவரத்து கழகங்கள் மக்களின் நலன் கருதி அண்ணா தொழிற்சங்கம் மூலம் ஓட்டுநர்களையும், நடத்துநர்களையும் வைத்து பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. இதனை எதிர்த்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறுகையில், ‘அண்ணா தொழிற்சங்கம் மூலம் பேருந்துகளை இயக்க முடிவு செய்தால், நெருப்புக்குள் கைவிட்ட குழந்தையின் நிலை தான் ஏற்படும்’ என்று போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். source : dinasuvadu.com

சென்னையிலும் தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை : போக்குவரத்து கழகம் அறிவிப்பு

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை போக்குவரத்த்து கழகம் ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், சென்னை மக்களின் நலன் கருதி தற்காலிக ஓட்டுனர், நடத்துனர் தேவை என்றும், கனரக ஓட்டுநர், நடத்துநர் உரிமம் வைத்துள்ளோர் சான்றிதழ்களுடன் மாநகர் போக்குவரத்து கழக பணிமனை கிளை மேலாளரை அணுகுமாறும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இதேபோல், திருச்சியிலும் தினக்கூலியாக ஒட்டுநர் நடத்துநர் தேவை என திருச்சி மத்திய … Read more

போராட்டத்தை தீவிரபடுத்த தொழிற்சங்கங்கள் முடிவு : சிஐடியு சவுந்தராஜன் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பொதுமக்கள் கடுமையாக பாதிப்புகுள்ளகின்றனர். இதுகுறித்து, சிஐடியு சவுந்தராஜன் கூறுகையில், போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை தீவிரபடுத்த முடிவு செய்துள்ளோம். தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. மேலும் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாவதற்கு வருந்துகிறம். என்றும், தமிழக அரசு உடனடியாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி இந்த போராட்டதிர்க்கு தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார். source : dinasuvadu.com

வேலை நிறுத்தம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 90 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் அங்கிருந்து வெளியூர் செல்லும் பயணிகள் நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு பல தனியார் பேருந்துகள் புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு அனுமதியின்றி இயக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.   போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ராமநாதபுரத்தில் அரசு … Read more

ஊதிய உயர்வுக்கு ஒப்புக் கொள்ளும் வரை வேலை நிறுத்தம் தொடரும்!

போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். போக்குவரத்துத் தொழிலாளர்களின் 13-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் அரசு ஒப்புக் கொண்ட ஊதிய உயர்வு போதாது எனக் கோரியும் தாங்கள் கோரிக்கை விடுத்தபடி ஊதிய உயர்வுக்கான காரணிகளை நிர்ணயிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்காக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், தொழிற்சங்கங்கள் மாறுபட்ட ஊதிய முரண்பாட்டை ஏற்கமுடியாது எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அடிப்படை … Read more

முற்றிலும் முடங்கிய அரசு பேருந்துகள்!திருச்சியில் மக்கள் கடும் அவதி ….

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் தினக்கூலி அடிப்படையில் அரசு பேருந்துகளை இயக்க ஓட்டுநர்கள், நடத்துனர்கள் தேவை என அறிவிப்புப் பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால், அந்த வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் சில தனியார் பேருந்துகள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டதால், பயணிகள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திற்குள் தனியார் ஆம்னி பேருந்துகள் சென்று பயணிகளை ஏற்றி வருகின்றன. தனியார் நகரப் பேருந்துகள் எந்த … Read more

அண்ணா தொழிற்சங்கம் மூலம் 80% பேருந்துகளை இயக்க முடிவு : அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டத்தினால் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அமைச்சர் எம்.எஸ்.விஜயபாஸ்கர் கூறியதாவது, ‘தமிழகம் முழுவதும் தற்காலிக ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மூலம் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணா தொழிற்சங்கம் மூலம் 80% பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்று ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.’ என வேண்டுகோள் விடுத்துள்ளார். source : dinasuvadu.com

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரிக்க மறுப்பு !

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கே. ரமேஷ் என்பவரின் முறையீட்டை ஏற்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு…. அரசு, தொழிலாளர்கள் என இரு தரப்பையும் பார்க்க வேண்டியுள்ளது  என  நீதிபதிகள் கவலை . இதனால்  பொங்கலுக்கு முன் போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடும் என   நம்பிக்கை உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் .. நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க … Read more