நீதிபதி பத்மநாபன் முதல்கட்ட விசாரணை !

மத்தியஸ்தராக நியமிக்கப்பட்ட நீதிபதி பத்மநாபன்  போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனை தொடர்பாக வருகின்ற 9ஆம் தேதி தனது விசாரணையை மேற்கொள்கிறார். போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், வருகிற 9ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி நிலைய பேரிடர் நிர்வாக கூட்டரங்கில் நீதிபதி … Read more

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்கள் பின்நோக்கி நடந்து ஆர்ப்பாட்டம்…!!

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்கள் பின்நோக்கி நடந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை பஸ்நிலையம் முன்பு பேருந்து கட்டண உயர்வை ரத்துசெய்ய கோரியும், தமிழக அரசை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்கள் பின்நோக்கி நகர்ந்து செல்லும் போராட்டம் செய்தனர். இதில் 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவரை குளித்தலை காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு தனியார் திருமணமகாலில் தங்கவைத்துள்ளனர். https://www.facebook.com/100011243927225/videos/543527182698741/ https://www.facebook.com/100011243927225/videos/543527182698741/

பேருந்து கட்டணத்தை குறைக்க கோரி எதிர்க்கட்சிகள் சாலை மறியல் போராட்டம்…!!

பேருந்து கட்டண உயர்வினை முழுமையாகத் திரும்பப்பெற வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் ஜனவரி 20ஆம் தேதி முதல் பேருந்துக் கட்டண உயர்வு அமலானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் உட்பட பல அரசியல்வாதிகளும் போராட்டங்களை நடத்தினர். அதன் பின், கட்டணத்தை சிறிதளவில் தமிழக அரசு குறைத்து, அது இன்று முதல் அமலுக்கும் வந்ததது. ஆனால், கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப்பெற வலியுறுத்தி … Read more

பஸ் கட்டண உயர்வு எதிரொலி : இலவச சைக்கிளை பயன்டுத்தலாம் , அழைக்கும் சென்னை மெட்ரோ நிறுவனம்…!!

  தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் அவதிப்படும் வேளையில், பலருக்கு மிதிவண்டி பக்கம் கவனம் திரும்பியுள்ளது. ஆகவே யாருக்கும் கவலை வேண்டாம்.. சென்னையில் மிதிவண்டி பயணத்திற்கு இலவசமாக வாய்ப்பளித்துள்ளது மெட்ரோ ரயில் நிறுவனம்.. அசோக் நகர், வடபழனி, திருமங்கலம், அண்ணாநகர் கிழக்கு, செனாய் நகர், நேரு பூங்கா ஆகிய 6 நிலையங்களில் இருந்து மிதிவண்டிகளை இலவசமாக பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்பணமோ அல்லது கட்டத்தேவையில்லை என்று என அந்நிறுவனம் … Read more

குறைக்கப்பட்ட பேருந்து கட்டணம் நாளை (29-01-2018) முதல் அமலுக்கு வரும்…!!

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று தேனியில் போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பஸ் கட்டண உயர்வை குறைப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் எனக்கூறியிருந்தார். எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை தமிழக அரசு குறைத்தது.தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்து தமிழக அரசு. இன்று குறைக்கப்பட்ட பஸ் கட்டணத்தின்படி, சாதாரண பேருந்துகளில் கட்டணம் 60 பைசாவில் … Read more

பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிப்ரவரி 1 முதல் சிபிஐ (எம்) தொடர் மறியல்

அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் அநியாய பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்களும், அனைத்துப் பகுதி பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் போராடி வருகின்றனர். குறிப்பாக லட்சக்கணக்கான மாணவர்கள் கட்டண உயர்வை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராடுவது என்ற உறுதியோடு வீதியில் இறங்கி வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நியாயமானக் குரலை ஏற்று கட்டண உயர்வை ரத்து செய்வதற்கு பதிலாக, அடக்குமுறையை எடப்பாடி அரசாங்கம் ஏவி வருகிறது. ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் … Read more

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திருச்சியில் போராட்டம்…!!

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முன்பு திமுகவின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சியினர் 500 பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.