எங்கள் கைகள் பூப்பறிக்காது.! இரு அச்சுறுத்தல்களை ஒரே நேரத்தில் முறியடிப்போம் – எச்சரிக்கை விடுத்த பிபின் ராவத்.!

வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் ஏற்படும் இரு நாட்டு அச்சுறுத்தலை இந்தியா ஒரே நேரத்தில் முறியடிக்கும் என்று முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா இடையே கடந்த மே மாதம் முதல் லடாக்கில் பகுதியில் எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. பின்னர் பல்வேறு கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடந்த சில தினங்களாக அங்கு பதற்றம் இல்லாமல் இருந்து வந்தது. சில தினங்களுக்கு முன்பு இந்திய எல்லையான லடாக் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் … Read more

சீனாவுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் படைகள் மூலம் பதிலடி -பிபின் ராவத்

சீனாவுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் படைகள் மூலம் பதிலடி கொடுக்கப்படும் என்று பிபின் ராவத் தெரிவித்துள்ளார். லடாக் எல்லையினல் இந்திய-சீன வீரர்கள் இடையே  நடந்த மோதலில்  இந்திய தரப்பில் 20 ராணுவ வீரா்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டதாக  கூறப்பட்டது. இதனை, இதுவரை  சீன அதிகாரப்பூா்வமாக அறிவிக்கவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் இந்திய-சீனப் படைகள்  குவிக்கப்பட்டன. இதனால், பதற்றம் நிலவியது. இதையடுத்து, இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது.  … Read more

இந்தியா, சீனா எல்லைப்பதற்றம்.. எத்தகைய நிலையையும் எதிர்கொள்ள முப்படைகள் தாயார்- பிபின் ராவத்!

இந்தியா, சீனா இடையே தொடரும் பதற்றத்தை எதிர்கொள்ள எத்தகைய தாக்குதலையும் முறியடிக்க இந்தியா தயாராகவுள்ளதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்தார். நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு முன்பு கடந்த திங்கட்கிழமை அன்று முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஆஜராகினர். அப்பொழுது இந்தியா, சீனா இடையே தொடரும் பதற்றத்தை எதிர்கொள்ள எத்தகைய தாக்குதலையும் முறியடிக்க இந்தியா தயாராகவுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்தியா, சீனா இடையிலான பதற்றத்தை தணிக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், எத்தகைய நடவடிக்கையையும் … Read more

காஷ்மீர் முதல் குமரி வரை வானில் விமானப்படை விமானங்கள் பறக்கும் – பிபின் ராவத்

நாட்டில் கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஆயுதப்படை சார்பாக நன்றியை தெரிவித்த முப்படை தலைமை தளபதி. கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா உட்பட உலகமே போராடி வருகிறது. இந்த போராட்டத்தில், மக்கள் அனைவரும் வீதிகளில் நடமாடாமல், வீடுகளிலேயே இருக்கும்படி, மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. அதன்படி, நிறைவடைய இருந்த ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனிடையே முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே, விமானப்படை … Read more

அது அல்ல தலைமை -போராட்டம் குறித்து ராணுவ தளபதி கருத்து

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.  போராட்டத்தில் வன்முறையை நோக்கி வழிநடத்துவது தலைமை அல்ல என்று ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.  பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் … Read more

எல்லையில் படைகள் முழு தயார் நிலையில் உள்ளது-பிபின் ராவத்

எல்லையில் படைகள் முழு தயார் நிலையில் உள்ளது என்று இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பங்கேற்றார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.எல்லைகளை கையாளுவதில் நாடுகளிடையே வேறுபாடு உள்ளது.எல்லையில் படைகள் முழு தயார் நிலையில் உள்ளது. பயங்கரவாதிகளை கண்டறிந்து ஒடுக்குவதில் ராணுவம் … Read more

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் முதன்முறையாக காஷ்மீருக்கு செல்லும் ராணுவ தளபதி பிபின் ராவத்

இன்று ராணுவ தளபதி பிபின் ராவத் காஷ்மீர் செல்கிறார். காஷ்மீர் மாநிலத்திற்கு வழக்கங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு சாமீபத்தில் அறிவித்தது.மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டு  யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும்  என்றும் அறிவித்தது.இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.பல இடங்களில் 144 தடை உத்தரவு ,செல்போன் சேவை ,இணைய சேவை உள்ளிட்டவை நிறுத்தப்பட்டு தற்போது படிப்படியாக செல்போன் சேவை மட்டும் வழங்கப்பட்டு … Read more

ராணுவம் அரசியலிலிருந்து விலகி இருக்கவேண்டும் : ராணுவ தளபதி

ராணுவம் அரசியலில் இருந்து விலகி இருக்கவேண்டும் என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறினார். இவர் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனை தெரிவித்திருந்தார். மேலும் அவர் கூறியதாவது, “ராணுவம் அரசியலில் இருந்து எப்படியாவது விலகி இருத்தல் வேண்டும். சமீப காலமாக ராணுவம் அரசியல் சார்புடையதாக மாறி வருவதைப்பார்க்கிறோம். இது தவிர்க்கப்பட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டதாக ராணுவம் இருக்க வேண்டும். அதுவே ஒரு ஜனநாயக நாட்டுக்கு அவசியம் ஆனது ஆகும். கடந்த காலங்களில் ராணுவத்தில் … Read more