அது அல்ல தலைமை -போராட்டம் குறித்து ராணுவ தளபதி கருத்து

  • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. 
  • போராட்டத்தில் வன்முறையை நோக்கி வழிநடத்துவது தலைமை அல்ல என்று ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.குறிப்பாக இந்த சட்டத்திற்கு எதிராக மாணவர்களும் போராட்டம் மேற்கொண்டும் வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து  ராணுவ தளபதி பிபின் ராவத் கூறுகையில், உங்களை சரியாக வழிநடத்துபவர்கள் தான் தலைவர்கள். தவறாக வழி வழிநடத்துபவர்கள் தலைவர்கள் அல்ல.கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் பெரிய அளவில் கூடி போராட்டம் நடைபெற்றப்போது  நகரங்களில் வன்முறைச் சம்பவஙகள் அரங்கேறியது தலைமை அல்ல என்று தெரிவித்தார்.