ஆந்திராவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி!

ஆந்திர மாநிலத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது கொரோனா மூன்றாம் அலை விரைவில் ஏற்பட உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிலும் இந்த மூன்றாம் அலையில் அதிகம் குழந்தைகள் தான் பாதிக்கப்படுவார்கள் எனவும் எநிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாகப் கடைபிடிக்க வேண்டும் எனவும், தடுப்பூசிகள் போட்டு கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். … Read more

போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கு இடையேயான துப்பாக்கி சண்டையில் 6 மாவோயிஸ்டுகள் உயிரிழப்பு!

ஆந்திராவில் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மாவட்டத்தின்  திகலமெட்டாவில் கிரேஹவுண்ட்ஸ் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதாக இன்று அதிகாலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளை போலீசார் கண்டறிந்ததும், போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சண்டையில் 6 மாவோயிஸ்டுகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. … Read more

ஆந்திராவில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1955 ஆக உயர்வு.!

ஆந்திராவில் கருப்பு பூஞ்சை அதிக அளவில் பரவி வருகிறது. இதுவரை ஆந்திராவில் 1955 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வருட காலங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தற்பொழுது இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருகிறது. கருப்பு பூஞ்சை நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் கண்டறியப்பட்டுள்ள நிலையில்கருப்பு  பூஞ்சைக்கு எதிரான … Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனைவியை பாத்ரூமில் அடைத்து வைத்த கணவர்!

தெலுங்கானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனைவியை வீட்டில் உள்ள குளியலறையில் 5 நாட்களாக அடைத்து வைத்திருந்த கணவர். புத்திமதி கூறி கொரோனா பாதித்த பெண்ணை வீட்டில் தனிமை படுத்த ஏற்பாடு செய்த போலீசார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு உறவினர்கள் மற்றும் உடன் பிறந்தவர்கள் கூட முன்வராத சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. தங்கள் உயிர் பாதுகாக்கப்பட்டால் போதுமென்ற அளவிற்கு மக்கள் … Read more

கொரோனாவால் உயிரிழந்ததாக அடக்கம் செய்யப்பட்ட 10 நாட்களுக்கு பின் மீண்டும் உயிருடன் வந்த பெண்!

கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக அடக்கம் செய்யப்பட்ட 75 வயது மூதாட்டி மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டம் கிறிஸ்டியான்பேட்டை பகுதியை சேர்ந்த கட்டையா என்பவரின் மனைவி தான் கிரிஜம்மா. 75 வயதுடைய இவருக்கு கடந்த மாதம் 12ஆம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மே 15ஆம் தேதி தனது மனைவியை பார்க்க கட்டயா மருத்துவமனைக்கு … Read more

ஆந்திராவில் ஆண் நண்பருடன் வெளியில் சென்ற பெண்ணை பலாத்காரம் செய்த 3 இளைஞர்கள்!

ஆந்திராவிலுள்ள கிழக்கு கோதாவரி பகுதியில் தனது ஆண் நண்பருடன் வெளியில் சென்றிருந்த பெண்ணை மூன்று இளைஞர்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு எங்கு சென்றாலும் பாதுகாப்பில்லை என்ற நிலை தான் உருவாகி உள்ளது. சில ஆண்கள் பெண்களிடம் தவறான எண்ணத்துடன் நடந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் தனியாக வெளியில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது ஒருபுறமிருக்க, தனது ஆண் நண்பர்களுடன் வெளியில் செல்லக் கூடிய பெண்களுக்குமே பாதுகாப்பு கிடையாது. … Read more

ஆந்திராவில் 5 நிமிடம் தாமதமாகிய ஆக்சிஜன் சப்ளை – உயிரிழந்த 11 கொரோனா நோயாளிகள்!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி அரசு மருத்துவமனையில் 5 நிமிடம் ஆக்சிஜன் சப்ளை செய்வதற்கு தாமதமானதால் ஐசியூவில் இருந்த 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில், கொரோனாவால் இறப்பவர்களை விட ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. பல்வேறு மாநில அரசுகளும் … Read more

ஆந்திரப்பிரதேச கல்குவாரியில் குண்டு வெடிப்பு – 10 பேர் உயிரிழப்பு!

ஆந்திர பிரதேசம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு கல் குவாரியில் பாறைகளை வெடிக்கச் செய்வதற்கு பயன்படுத்தப்படும் வெடிபொருள் வெடித்ததில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் உள்ள கடப்பா எனும் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் பல தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். பாறைகளை வெடிக்க செய்வதற்காக இந்த குவாரியில் உள்ள தொழிலாளர்கள் வெடி பொருட்களை பயன்படுத்துவது வழக்கமாம். அதுபோல இன்றும் பாறைகளை வெடிக்க செய்வதற்காக கிரானைட் கற்களை துளையிட்டு கொண்டு இருந்த பொழுது வெடிக்க செய்வதற்காக … Read more

மின்கசிவு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே திடீர் தீ விபத்து!

மின் கசிவு காரணமாக இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே உள்ள ஆஸ்தான மண்டபத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருமலையில் உள்ள பேடி ஆஞ்சநேயர் சுவாமி கோயிலுக்கு அருகில் கிட்டத்தட்ட 150 கடைகள் வரை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே இருக்கக்கூடிய ஆஸ்தான மண்டபத்தில் கடைகளுக்கு அருகே செல்லக் கூடிய மின் வயரில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. எனவே, திடீரென எதிர்பாராத விதமாக மின்கசிவு காரணமாக தீ … Read more

ஆந்திரபிரதேசத்தில் மே 5 முதல் 14 நாட்களுக்கு பகுதி நேர ஊரடங்கு உத்தரவு…

கொரோனா பாதிப்பு அதிகரிப்பை கட்டுப்படுத்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி  ஊரடங்கை அறிவித்துள்ளார்… ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அங்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் 23,920 பேருக்கு கொரோனா  தொற்று பதிவாகியுள்ளன. மேலும் 83 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது, தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,43,178 ஆக அதிகரித்துள்ளது, இதுவரையிலும் 9,93,708 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் 8,136 பேர் இறந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆந்திர … Read more