ஆந்திராவில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1955 ஆக உயர்வு.!

  • ஆந்திராவில் கருப்பு பூஞ்சை அதிக அளவில் பரவி வருகிறது.
  • இதுவரை ஆந்திராவில் 1955 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வருட காலங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தற்பொழுது இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருகிறது.

கருப்பு பூஞ்சை நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் கண்டறியப்பட்டுள்ள நிலையில்கருப்பு  பூஞ்சைக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கருப்பு பூஞ்சையின் பாதிப்பும் உயிரிழப்பும் தொடர்ந்து கொண்டே தான் செல்கிறது.

ஆந்திர மாநிலத்திலும் இதுவரை 1,955 பேர் இதுவரை கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 114 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் அம்மாநில மருத்துவ மற்றும் சுகாதார முதன்மை செயலாளர் அனில் குமார் தெரிவித்துள்ளார். மேலும் தற்பொழுது கருப்பு பூஞ்சையால் 1,301 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal