வடசென்னை படம் இவ்வளவு நேரம் ஓடுமா..!!

வடசென்னை படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம் படத்தைத் தொடர்ந்து வடசென்னை படம் உருவாகியுள்ளது. சென்னையின் முப்பது ஆண்டுகால வரலாற்றை விவரிக்கும் விதமாக இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு, வடசென்னையை கதைக்களமாக வைத்து, கடந்த இரண்டு வருடங்களாக இந்தப் படம் எடுக்கப்பட்டு வந்தது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்தப் படம் தணிக்கைக் குழுவில் ஏ … Read more

`லவ்வர கிஸ் அடிக்காம வேற யார கிஸ் அடிக்கிறது’: வடசென்னை புரமோ வீடியோ….!!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியாகவுள்ள படம் வட சென்னை. படம் 17-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் இரண்டு புரமோ வீடியோக்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம் படத்தைத் தொடர்ந்து வடசென்னை படம் உருவாகியுள்ளது. சென்னையின் முப்பது ஆண்டுகால வரலாற்றை விவரிக்கும் விதமாக இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. வட சென்னையை கதைக்களமாக வைத்து, கடந்த இரண்டு வருடங்களாக இப்படம் எடுக்கப்பட்டு வந்தது. … Read more

"தூள் கிளப்பும் வடசென்னை டீசர்" கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்..!!

‘விசாரணை’ படத்தின் வெற்றிக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் ரெடியாகி வரும் படம் ‘வடசென்னை’. இதில் ஹீரோவாக தனுஷ் நடித்துள்ளார். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர், சுப்ரமண்யம் சிவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இதற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வெங்கடேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கேங்ஸ்டர் த்ரில்லரான இதனை தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். இப்படம் மூன்று பாகங்களாக … Read more

தனுஷ் படத்தில் நடிகர் விஷால் ஜோடி..!

நடிகர் விஷாலுடன் நடித்த நடிகை தற்போது தனுஷ் படத்தில் நடிக்கவுள்ளார். பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநர் அவதாரத்தை எடுத்தார் நடிகர் தனுஷ். சென்டிமென்டாக அந்தப் படத்தை ராஜ்கிரணை வைத்து இயக்கினார். அவருக்கு ஜோடியாக ரேவதி நடித்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது  தான் இயக்கும் இரண்டாவது படத்தையும் சமீபத்தில் தொடங்கினார் தனுஷ். ஃபேன்டஸி பொழுதுப் போக்கு படமான இதில், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, … Read more

நடிகரை தனுஷை காப்பாற்றிய எஸ்.ஜே.சூர்யா..!!

தனுஷ் நடிப்பில் வடசென்னை படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து, கவுதம்மேனன் இயக்கத்தில் என்னை நோக்கிப் பாயும் தோட்டா, பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 ஆகிய படங்களில் நடித்துகொண்டிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து அவரே  இயக்கி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.இந்தப்படத்தில் தனுஷுடன் கன்னட நடிகர் சுதீப் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நேரத்தில் அவர் படத்திலிருந்து விலகிக் கொண்டார் இதனால் நிலை தடுமாறிய தனுஷ் கடைசி நேரத்தில் அவருக்குப் பதிலாக யாரை நடிக்க வைப்பது? என்று தீவிரமாகத் … Read more

எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா வட சென்னை எதிர்பார்ப்போடு ரசிகர்கள்..!!

வட சென்னை’ படத்தின் கேரக்டர்களை அறிமுகப்படுத்தும் விதமாக புதிய டீஸர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வெற்றிமாறன் –  தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘வடசென்னை’. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா இயக்குநர் அமீர், சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சென்னையின் வட சென்னை பகுதியை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படம் ஒரு கேங்ஸ்டர் படமாக தயாராக்கப்பட்டு வருகின்றது.தற்போது இப்படத்தின் டீஸர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி … Read more

அரசியல்வாதியாக மாறுகிறார் தனுஷ் சூப்பர்ஸ்டாரின் வழியை பின்பற்றுகிறாரா

தனுஷ் இயக்கத்தில் சமிபத்தில் வெளியான படம் காலா இந்த படமா வெளிவருவதற்கு முன்னால்  ரஜினி தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தை பார்க்க  சென்ற பொழுது எழுந்த கடும் விமர்சனங்களால் இப்படம் ஓடாது என எதிர்பார்த்த நிலையில் வசூல் சாதனை படைத்தது காலா. வெற்றிமாறன் இயக்கத்தில்  நடிகர் தனுஷ், இயக்குநர் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் தான் ’வடசென்னை’. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. … Read more

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தனது ரசிகருக்கு நடிகர் தனுஷ் இரங்கல்..!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தனது ரசிகருக்கு நடிகர் தனுஷ் இரங்கல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்றைய முன்தினம் நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் தனது நற்பணி மன்றத்தை சார்ந்த ரகு என்பவர் … Read more

தனுஷின் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அப்டேட்ஸ்…!!

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெறவுள்ளது. இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். மேலும் படத்தில் ராணா டகுபதி, சிறப்பு தோற்றத்தில் வருகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. பல மாதங்களாக நடைபெறாமல் இருந்த படப்பிடிப்பு, கடந்த மாதத்தில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி மற்றும் சென்னை ஈசிஆரில் படப்பிடிப்பு நடத்தியுள்ள கௌதம் மேனன், சில காட்சிகளை மும்பையில் எடுக்கத் … Read more

படைவீரன்’ படத்திற்காக தனுஷ் பாடிய பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு…!

  இயக்குனர் தனா எழுதி, இயக்கிய ‘படைவீரன்’ படத்தில் விஜய் யேசுதாஸ், பாரதிராஜா, அம்ரிதா, அகில் ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தினை மதிவாணன் தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் ‘லோக்கல் சரக்கு பாரீன் சரக்கு’ என்னும் பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். தற்போது இப்படத்தின் லிரிக் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. https://www.youtube.com/watch?time_continue=3&v=drVNDPY_hTw