கஜா புயல் எதிரொலி …!இன்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை…!மதுக்கடைகளை மூட உத்தரவு …!

கஜா புயல் காரணமாக காரைக்காலில் 2 மணிக்கு மேல் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‘கஜா’ புயலையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக காரைக்காலில் இன்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மீனவர்கள் இன்று  கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில் கஜா புயல் காரணமாக காரைக்காலில் 2 மணிக்கு மேல் மதுக்கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேகம் அதிகரிக்கும் கஜா புயல் …!மணிக்கு 25 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது …! சென்னை வானிலை ஆய்வு மையம்

கஜா புயல் மணிக்கு 25 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,கஜா புயல் தற்போது 290 கிமீ தொலைவில் சென்னைக்கு கிழக்கேயும், நாகையிலிருந்து 290 கிமீ தொலைவில் வடகிழக்கிலும், காரைக்காலுக்கு கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.அதேபோல் கஜா புயலின் வேகம் மணிக்கு 18 கிலோ மீட்டரில் இருந்து 25 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் … Read more

கஜா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் தேர்வு…!நவம்பர் 22 ஆம் தேதி நடைபெறும்…!அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு …!

இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. கஜா புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது.தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது. இந்நிலையில்  இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் வரும் 22 ஆம் தேதி நடைபெறும் என்று  தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இரவு கரையை கடக்கும் கஜா புயல்…!அதி தீவிர புயலாக வலுப்பெறும்..!வானிலை ஆய்வு  மையம் தகவல்

இன்று இரவு 11.30 மணியளவில் கடலூர் – பாம்பனுக்கு இடையே நாகைக்கு அருகே கஜா புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,  கஜா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ. மற்றும் நாகைக்கு வடகிழக்கே 300 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இன்று இரவு 11.30 மணியளவில் கடலூர் – பாம்பனுக்கு இடையே நாகைக்கு அருகே கஜா புயல் கரையை … Read more

இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கும் கஜா புயல் ..!மின் இணைப்பை துண்டிக்க மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உத்தரவு ..!

கஜா புயல் கரையை கடக்கும் நிலையில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு  மையம் கூறுகையில்,கஜா புயல் இன்று இரவு சுமார் 11.30 மணியளவில் பாம்பன்- கடலூர் இடையே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும்போது சென்னைக்கு பாதிப்பு இருக்காது. மிதமான மழை பெய்யலாம் .14 கி.மீ வேகத்தில் இருந்த கஜா புயலின் வேகம் 18 கி.மீ வேகமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இதனால் மின்சாரத்துறை … Read more

மிரட்டும் கஜா புயல்..!அறிவிப்பு வந்த பின்னரே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும்..! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் புயல் முன்னெச்சரிக்கை தகவல் மையம் செயல்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மாநில அவசர கட்டுபாட்டு மையத்தில் புயல் முன்னெச்சரிக்கை தகவல் அறிவிப்பு திட்டத்தை சோதனை அடிப்படையில் அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார். இதன் பின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், புயல் & பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தகவலை மக்களுக்கு தெரிவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். நாகையில் புயல் கரையை கடப்பதால், கடலூரில் இருந்து கூடுதலாக ஒரு தேசிய பேரிடர் குழு மற்றும் 2 மாநில … Read more

கஜா புயலின் வேகம் மணிக்கு 23 கி.மீ அதிகரிப்பு …!சென்னை வானிலை ஆய்வு மையம்

கஜா புயல் நகர்ந்து வரும் வேகம் அதிகரித்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், 14 கி.மீ வேகத்தில் இருந்த கஜா புயலின் வேகம் மணிக்கு 23 கி.மீ வேகமாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.சென்னைக்கு அருகே 328 கி.மீ, தொலைவில், நாகைக்கு அருகே 338 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது கஜா புயல் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல்  ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், நாகை, … Read more

மோசமான வானிலை…! சென்னை- தூத்துக்குடி விமான சேவையில்  பாதிப்பு ..!

மோசமான வானிலையால்  சென்னை- தூத்துக்குடி விமான சேவையில்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், நாகை, தஞ்சை மாவட்டங்களில் கஜா புயல் முன்னெச்சரிக்கையாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று நடைபெறவிருந்த பாரதிதாசன் பல்கலைகழக தேர்வுகள் , திருவள்ளுவர் பல்கலை. உறுப்பு கல்லூரிகள் மற்றும் காரைக்குடி அழகப்பா  பல்கலைகழக தேர்வுகள், திருவாரூர் மத்திய பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலையில் இன்று நடைபெறுவதாக இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  சென்னை- தூத்துக்குடி விமான சேவையில்  … Read more

நெருக்கி வருகிறது கஜா புயல் …!பாம்பன் -கடலூர் இடையே இன்று கரையை கடக்கும் …!வானிலை ஆய்வு மையம்

பாம்பன் -கடலூர் இடையே நாகை அருகே இன்று மாலை கஜா புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,  கஜா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 410 கி.மீ. தொலைவிலும் நாகைக்கு வடகிழக்கே 480 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மேற்கு தென்மேற்கு திசையில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.சென்னைக்கு அருகே 380 கி.மீ, நாகை அருகே 400 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. பாம்பன் … Read more

கஜா புயல் எதிரொலி ..!இன்று நடைபெறவிருந்த பொறியியல் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு …!அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைகழக இணைப்பு கல்லூரிகள், திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக இணைப்பு கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதேபோல் திருவள்ளுவர் பல்கலைகழக உறுப்பு கல்லூரிகள் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் தொழில் நுட்ப கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பில் , இன்று நடைபெறவிருந்த … Read more