கஜா புயலின் வேகம் மணிக்கு 23 கி.மீ அதிகரிப்பு …!சென்னை வானிலை ஆய்வு மையம்

கஜா புயல் நகர்ந்து வரும் வேகம் அதிகரித்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், 14 கி.மீ வேகத்தில் இருந்த கஜா புயலின் வேகம் மணிக்கு 23 கி.மீ வேகமாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.சென்னைக்கு அருகே 328 கி.மீ, தொலைவில், நாகைக்கு அருகே 338 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது கஜா புயல் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல்  ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், நாகை, தஞ்சை மாவட்டங்களில் கஜா புயல் முன்னெச்சரிக்கையாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அதேபோல் இன்று நடைபெறவிருந்த பாரதிதாசன் பல்கலைகழக தேர்வுகள் , திருவள்ளுவர் பல்கலை. உறுப்பு கல்லூரிகள் மற்றும் காரைக்குடி அழகப்பா ப பல்கலைகழக தேர்வுகள், திருவாரூர் மத்திய பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலையில் இன்று நடைபெறுவதாக இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

Leave a Comment