“பிரியங்கா காந்தி கைது;சட்டவிரோதமானது, முற்றிலும் வெட்கக்கேடானது” – முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம்..!

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி  கைது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கார் மோதியதில் 4 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.மேலும்,விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது.இந்த சம்பவத்துக்கு,நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து,நேற்று விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூர் … Read more

அடுத்த ஆண்டு தேர்தல் – உ.பி அமைச்சரவை இன்று மாலை விரிவாக்கம் ..!

உத்தரபிரதேச மாநில அமைச்சரவை இன்று மாலை 5.30 மணிக்கு விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அமைச்சரவையை இன்று மாலை விரிவாக்கம் செய்ய உள்ளார்.இன்று மாலை 05:30 மணிக்கு லக்னோவில் உள்ள ராஜ் பவனில் பதவியேற்பு விழா நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது. அதன்படி,காங்கிரசில் இருந்து பிஜேபிக்கு மாறிய ஜிதின் … Read more

விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை விதிப்பு – உத்தர பிரதேச அரசு!

உத்தர பிரதேச மாநிலத்தில் விநாயகர் சதூர்த்தி விழா கொண்டாடுவதற்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.  நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பரவலை தவிர்க்கும் விதமாக பல்வேறு மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மக்கள் இந்த வருடம் வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் … Read more

உஜ்வாலா திட்டத்தின் கீழ் 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு – உத்தர பிரதேச முதல்வர் அறிவிப்பு!

உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழுள்ள 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்படும் என உத்தர பிரதேச முதல்வர் அறிவிப்பு. மே ஒன்றாம் தேதி 2016-ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்களால் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா எனும் முதன்மைத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்படும். பாரம்பரிய சமையல் எரிபொருளான விறகு, நிலக்கரி மற்றும் … Read more

அக்பர் மிகப்பெரிய பேரரசர் இல்லை :சர்ச்சையை கிளப்பிய யோகி ஆதித்யநாத்

அக்பர் மிகப்பெரிய பேரரசர் இல்லை எனவும், பேரரசர் என்ற பதத்துக்கு பொருத்தமானவர் மகாராணா பிரதாப்பே என்று உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ஐ.எம்.ஆர்.டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய யோகி ஆதித்யநாத் கூறியதாவது:- “ சுய மரியாதையில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாத மகாராணா பிரதாப்பே மிகப்பெரிய பேரரசர் என்ற பட்டத்துக்கு பொருத்தமானவர். இந்திய வரலாற்றில் மிகச்சிறந்த ஆட்சியாளராக பிரதாப் இருந்தார். … Read more

உ.பி. முதலமைச்சர் அளித்த காசோலை திரும்பி வந்ததால் மாணவண்அதிர்ச்சி..!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 7வது இடம் பிடித்தவர் அலோக் மிஸ்ரா. கடந்த மாதம் 29ம் தேதி லக்னோவில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அலோக் மிஸ்ராவை பாராட்டி, ஒரு லட்சம் ரூபாய்க்கு காசோலை வழங்கினார். இதையடுத்து, மிஸ்ராவின் தந்தை அந்த காசோலையை கடந்த 5ம் தேதி வங்கியில் செலுத்தினார். ஆனால், காசோலையில் உள்ள கையெழுத்து பொருந்தவில்லை எனக்கூறி வங்கி காசோலை திருப்பி அனுப்பியது. அத்துடன், … Read more

துப்பாக்கி சுடுதல் வீராங்கனைக்கு ரூ.4.5 லட்சம் ! யோகி ஆதித்யநாத் அறிவிப்பு..!

சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு (ஐ.எஸ்.எஸ்.எப்) சார்பில் ஜெர்மனியின் சுகல் நகரில் வரும் 22-ம் தேதி ஜூனியர் உலகக் கோப்பை போட்டி தொடங்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்கு, உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த பிரியா சிங் (வயது 19) தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க காத்திருக்கும் பிரியா சிங்கின் குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பதால், அவரால் ஜெர்மனி சென்று தங்கியிருந்து போட்டியில் பங்கேற்க முடியாத … Read more

நடிகர் சஞ்சை தத்துடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு ! பா.ஜ.க. ஆதரவு கேட்பு..!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த மாதம் 26-ம் தேதியோடு 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தது. இதையடுத்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை குறிவைத்து “ஆதரவுக்கான தொடர்பு” எனும் பிரச்சாரத்தை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது. இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாக, கட்சியின் 4 ஆயிரம் நிர்வாகிகள், சுமார் ஒரு லட்சம் பேரை தொடர்புகொண்டு சந்தித்து மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கி கூறவேண்டும் என … Read more

ராமர் கோவிலை கட்டாமல் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது! உ.பி. முதல்வரிடம் சாதுக்கள் குழு முறையீடு

உ.பி.யில் ராமர் கோவில் கட்டும் பணியில் காலம் தாழ்த்தப்பட்டு வருவது, சாதுக்கள் மற்றும் துறவிகள் மத்தியில் சீற்றத்தை அதிகரிக்க செய்து வருகிறது. இந்நிலையில், சாது திகம்பர அக்ஹர மஹந்த் சுரேஷ் தாஸ் தலைமையில் சாதுக்கள் மற்றும் துறவிகள் குழு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை இன்று சந்தித்து பேசினர். முதல்வருடனான சந்திப்புக்கு முன்பாக பேசிய சாதுக்கள், அயோத்தியில் ராமர் கட்டும் பணி மிகவும் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆளும் பாரதிய ஜனதா அரசு, ராமர் கோவில் கட்டுமான பணிகளை … Read more