அடுத்த ஆண்டு தேர்தல் – உ.பி அமைச்சரவை இன்று மாலை விரிவாக்கம் ..!

உத்தரபிரதேச மாநில அமைச்சரவை இன்று மாலை 5.30 மணிக்கு விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அமைச்சரவையை இன்று மாலை விரிவாக்கம் செய்ய உள்ளார்.இன்று மாலை 05:30 மணிக்கு லக்னோவில் உள்ள ராஜ் பவனில் பதவியேற்பு விழா நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.

அதன்படி,காங்கிரசில் இருந்து பிஜேபிக்கு மாறிய ஜிதின் பிரசாத் பேபி ராணி மௌரியா, சஞ்சய் நிஷாத், பல்டு ராம், சஞ்சய் கவுர், தரம்வீர் பிரஜாபதி, முன்னாள் கேபினட் அமைச்சர் சேத்தன் சௌகானின் மனைவி சங்கீதா சவுகான் ஆகியோர் உ.பி.யின் புதிய அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்புள்ளது.உபி அமைச்சரவையில் தற்போது 53 அமைச்சர்கள் உள்ளனர், மேலும் 7 பேரை அரசியலமைப்பு வரம்பின் படி சேர்க்கப்படலாம்.

ஜூன் மாத தொடக்கத்தில், முதல்வர் ஆதித்யநாத் தனது அமைச்சரவையை மாற்றி அமைக்கப் போகிறார் என்ற வலுவான தகவல்களுக்கு மத்தியில், பாஜகவின் உத்தரப் பிரதேச பொறுப்பாளர் ராதா மோகன் சிங் கூறுகையில், காலியிடங்கள் இருந்தபோதிலும்,முதல்வர் யோகி விரும்பும் போது அவற்றை நிரப்புவது அவரது அதிகாரம் என்று கூறினார்.

உத்தரபிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா, பிடிஐக்கு அளித்த பேட்டியில், “ஆட்சிக்கு திரும்புவதற்கு யோகி ஆதித்யநாத் ஜி தலைமையில் கட்சி தேர்தலில் போட்டியிடும் என்பதை மத்திய தலைமை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது” என்றார்.

2022 ஆம் ஆண்டில் உ.பி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில்,பாஜக அரசின் இந்த விரிவாக்கம்,தேர்தலில் அதன் வெற்றியை நோக்கிய நடவடிக்கையின் ஒரு முயற்சியாக  இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.