‘வாழ வழியில்லை’ – இலங்கையில் இருந்து 4 கைகுழந்தைகளுடன் தமிழகம் வந்த 5 குடும்பங்கள்…!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், இன்று ஐந்து குடும்பங்களை சேர்ந்த 15 இலங்கைத்தமிழர்கள் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வரும் நிலையில் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் இறங்கி உள்ளனர். அங்கு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில் அங்கு வாழ இயலாத சூழலால் இலங்கையிலிருந்து தமிழகம் நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். கடந்த 22ஆம் தேதி … Read more

இலங்கையில் போலீசார் துப்பாக்கி சூடு : ஒருவர் உயிரிழப்பு ; 12 பேர் காயம்!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு, அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை, எரிபொருள் விலை அதிகரித்துள்ளதுடன் மின் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கை மக்களில் பலர் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அதிபர் மற்றும் பிரதமரை பதவி விலகுமாறு தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், போராட்டக்காரர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு போலீசார் எச்சரித்துள்ளனர். ஆனால், போராட்டக்காரர்கள் அரசின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ள … Read more

#Breaking:இலங்கையிலிருந்து மேலும் 3 பேர் தமிழகம் வருகை!

இலங்கை அந்நியச்செலாவணி கையிருப்பு குறைவு காரணமாக வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.இதனால்,அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்,இலங்கை அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்,நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி கலைக்க முயன்றனர்.இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில்,கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து மேலும் 3 பேர் … Read more

#Shocking:பெட்ரோல் விலை ரூ.84 அதிகரிப்பு – ஒரு லிட்டர் விலை எவ்வளவு தெரியுமா?..!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில்,உணவு,எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன.இதனால்,மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த இக்கட்டான நிலைக்கு அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்சே தான் காரணம் என்றும்,அவர் பதவி விலக வேண்டும் என்றும் இலங்கையில் பெரும் போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு லங்கா ஐஓசி (எல்ஐஓசி) எரிபொருள் விலையை உயர்த்தியதை அடுத்து, பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை அதிகரிக்க அரசு … Read more

இலங்கை : கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் 17 அமைச்சர்கள் பதவியேற்பு …!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை உயர்ந்துள்ளதுடன், அங்கு மின்சார தட்டுப்பாடும் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் என கோரி இலங்கை மக்கள் வீதிகளில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சே  உடன் இணைந்து அண்மையில் அமைச்சரவையில் உள்ள அனைவருமே ராஜினாமா செய்தனர். … Read more

மக்கள் அமைதி காக்க வேண்டும் – ராஜபக்ஷே வேண்டுகோள்

மகிந்த ராஜபக்ஷே, இலங்கை மக்கள் அமைதி காக்க வேண்டும் வேண்டுகோள். இலங்கையை பொறுத்தவரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பெரிய அளவிலான பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நிய செலவாணி வரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துப் பொருட்களும் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அங்கு தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுவதுடன், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் … Read more

இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு மட்டும் உதவுவது பிளவை ஏற்படுத்தும் – முதல்வருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள்!

இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு மட்டும் உதவுவது நாட்டுக்குள் பிளவை ஏற்படுத்தும் என  தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியில் நிலவி வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக முதல்வருக்கு இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது, இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு மட்டும் உதவுவது நாட்டுக்குள் பிளவை ஏற்படுத்தும். எனவே இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்குமே தமிழ்நாடு … Read more

#Breaking:இலங்கையிலிருந்து மேலும் 21 பேர் தமிழகம் வருகை!

இலங்கையிலிருந்து மேலும் 21 பேர் தனுஷ்கோடிக்கு வருகை. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலையானது நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.இதனால்,ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.இதன்காரணமாக இலங்கை தமிழர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொண்டு அகதிகளாக தமிழகத்திற்கு வருகை புரிகின்றனர். இந்நிலையில்,இலங்கையிலிருந்து மேலும் 21 பேர் தனுஷ்கோடிக்கு வந்துள்ளதாகவும்,தனுஷ்கோடிக்கு அருகே அரிச்சல்முனைக்கு வந்த 21 பேரிடம் கியூ … Read more

இலங்கை மக்கள் அனைவருக்கும் உதவ வேண்டும் – தமிழ் தேசிய கூட்டமைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி சுமந்திரன் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அனைத்து இலங்கை மக்களுக்கும் உதவ வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்.  பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வலியுறுத்தியுள்ளார். அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தமிழக அரசு தயாராக உள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் நிவாரண … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்..!

இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நன்றி தெரிவித்துள்ளது.  பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வலியுறுத்தியுள்ளார். அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தமிழக அரசு தயாராக உள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் நிவாரண பொருட்களை விநியோகிக்க அனுமதி வழங்கவும் வலியுறுத்தி இருந்தார். இந்த … Read more