‘வாழ வழியில்லை’ – இலங்கையில் இருந்து 4 கைகுழந்தைகளுடன் தமிழகம் வந்த 5 குடும்பங்கள்…!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், இன்று ஐந்து குடும்பங்களை சேர்ந்த 15 இலங்கைத்தமிழர்கள் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வரும் நிலையில் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் இறங்கி உள்ளனர். அங்கு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில் அங்கு வாழ இயலாத சூழலால் இலங்கையிலிருந்து தமிழகம் நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

கடந்த 22ஆம் தேதி வரை 16 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் தனுஷ்கோடிக்கு வந்தனர். இவர்கள் அனைவருமே மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று மேலும் ஐந்து குடும்பங்களை சேர்ந்த 15 இலங்கைத்தமிழர்கள் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.

நான்கு கைக்குழந்தைகளுடன் வந்த இந்த ஐந்து குடும்பங்களையும், மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளனர். கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இலங்கையில் இருந்து இது வரை 75 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.