நீலகிரியில் 138 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை.! மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்.!

நீலகிரி முதல் கூடலூர் வரையில் 138 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ், சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.  நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலத்திற்கு (ஊட்டி) இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் வந்துள்ளார். அங்கு ஒரு விழாவில் கலந்துகொண்ட அவர் கூறுகையில், ‘ மத்திய தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் நீலகிரி முதல் கூடலூர் வரையில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று … Read more

நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதீத கனமழை.. சாலைகளில் வெள்ளம்.. பள்ளிகளுக்கு விடுமுறை.!

நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மேற்கு திசையில் காற்றின் வேகம் அதிகரித்ததன் காரணமாக நேற்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை, கனமழை பெய்தது. கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்தது. அதேபோல் திருப்பூர், தேனி, மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் … Read more

நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு…!

கோவை மற்றும் நீலகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி மற்றும் கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தேனீ, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் மலை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி கோவையில் மிக கனமழை.! எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்.!

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அநேக இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது . தற்போது வானிலை ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு … Read more

தமிழத்தில் இந்த 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….

நீலகிரி, கோவை , தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.  வானிலை ஆய்வு மையமும் , அதற்கு ஏற்றார்போல, எச்சரிக்கைகளை கொடுத்து வருகிறது. இந்நிலையில், தற்போது வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை கொடுத்துள்ளது. அதன் படி,நீலகிரி, கோவை , தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது … Read more

நீலகிரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை !

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து  நீலகிரி மாவட்டத்தில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மே-20-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – நீலகிரி ஆட்சியர்

மே-20-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை  அறிவித்த நீலகிரி ஆட்சியர். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா செல்வது உண்டு. இதனால் ஆண்டுதோறும் இந்த நாட்களில் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஊட்டி மலர் கண்காட்சி 20-ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது இந்த … Read more

மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மே 15ஆம் தேதி முதல் அமல்..!

நீலகிரி மாவட்டத்தில் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மே 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் விற்கப்படும் மது பானங்களை பயன்படுத்திய பின்னர் காலி மது பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசிச் செல்வதால், அவற்றை விலங்குகள் மிதிக்கும்போது காயமடைவதாகவும், அடுத்த மூன்று மாதங்களில் அவை இறந்து விடுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்திருந்த நிலையில், ஏப்.25-ஆம் தேதிக்குள் … Read more

#Breaking:பரபரப்பு…நீலகிரியில் ராணுவ ஹெலிஹாப்டர் விபத்து – 4 பேர் பலி;3பேர் படுகாயம்!

நீலகிரி:ராணுவ ஹெலிஹாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது ராணுவ ஹெலிஹாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது மோசமான வானிலை(மேகமூட்டம்) காரணமாக காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதியாக பிபின் ராவத் உட்பட நான்கு பேர் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும்,அதில் பயணம் செய்தவர்களின் முழுமையான விபரம் தெரிவிக்கப்படவில்லை.இதனையடுத்து,மீட்பு படையினர் விபத்துக்குள்ளான பகுதிக்கு சென்று மீட்பு … Read more

நீலகிரி ஆட்சியரை இடமாற்றம் செய்ய அனுமதி அளித்த உச்சநீதிமன்றம்..!

நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.  கடந்த 2019-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புக்கு தடை விதித்தும், அப்பகுதியில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்நிலையில், நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டடங்கள் மற்றும் ரெசார்ட்டுகளை உடனடியாக அவர் அகற்றவும், விதிமுறைகளை மீறி புதிய … Read more