அதிர்ச்சி…குன்னூரில் பள்ளி அருகே மாணவிக்கு கத்திக்குத்து!

குன்னூரில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு கத்தி குத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம்,குன்னூர் ஒய்எம்சி அருகே தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் வழக்கம் போல பள்ளிக்கு சென்ற நிலையில்,அப்போது அவரை பின்தொடர்ந்த ஆசிக் என்ற இளைஞர் பள்ளி  அருகே மாணவியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட முயன்றார்.இதனைக் கண்ட  பொதுமக்கள் இளைஞரை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அப்போது,அந்த இளைஞர் மது போதையில் இருந்தது … Read more

ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதி;இன்று பார்வையிடுகிறார் ராணுவ தளபதி!

நீலகிரி:குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை ராணுவ தளபதி எம்.எம்.நரவனே இன்று காலை பார்வையிடுகிறார். கடந்த 8-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் வெலிங்டனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி கல்லூரி கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 14 பேர் கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ முகாமிற்கு சென்று கொண்டிருந்தனர்.அப்போது காட்டேரி நஞ்சப்பாசத்திரம் பகுதியில் உள்ள வனப்பகுதியின் மேலே … Read more

#Breaking:ஹெலிகாப்டர் விபத்து;அடையாளம் காணப்பட்ட 2 பேரின் உடல்கள்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கமாண்டோ வீரர்கள் சாய் தேஜா மற்றும் விவேக் குமார் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம்,குன்னூரின் காட்டேரி பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில்,முப்படை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து,உடல்கள் எரிந்த நிலையில் இருந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் ,அவரது மனைவி,மற்றும் முப்படைத் … Read more

ஹெலிகாப்டர் விபத்தில் தீயை அணைக்க உதவிய மக்களுக்கு கம்பளி வழங்கிய டிஜிபி..!

ஹெலிகாப்டர் விபத்து நடந்த குன்னூர் பகுதியில் உள்ள மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு, கம்பளி வழங்கி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.  குன்னூரில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 வீரர்கள்  உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் நடந்த போது, அப்பகுதியில் உள்ள மக்கள் மீட்புப்பணிகள் மேற்கொள்ள உதவியாக இருந்தனர். இதனையடுத்து, விபத்து நடந்த குன்னூர் பகுதியில் உள்ள மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு, … Read more

#HelicopterCrash:13 ஆம்புலன்சில் 13 பேரின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

வெலிங்டனில் இருந்து 13 ஆம்புலன்சில் 13 பேரின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. குன்னூர் அருகே நேற்று நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில்,அதில் பயணித்த 14 பேரில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.மேலும்,கேப்டன் வருண் 80 சதவிகித காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது,வெலிங்டன் சதுக்கத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 … Read more

#Helicopter Crash : விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டி கண்டெடுப்பு..!

குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில், முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக … Read more

#HelicopterCrash:”இந்தியா தனது துணிச்சலான மகனை இழந்துள்ளது” – ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்!

முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். நீலகிரியின் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெற இருந்த கருத்தரங்கில் பங்கேற்பதாக முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 9 பேர் தமிழகம் வந்தார்கள்.இதனையடுத்து,சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டனுக்கு முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேருடன் ராணுவ ஹெலிஹாப்டர் புறப்பட்டது. ஆனால், ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி என்ற … Read more

#Helicopter Crash : மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே போக்குவரத்து மாற்றம்..!

குன்னூரில் ஏற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து, மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே போக்குவரத்து மாற்றம்.  ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட14 பேர் பயணித்துள்ளனர்.  இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கேப்டன் வருண் 80 சதவிகித … Read more

ஹெலிகாப்டர் விபத்து – கோவை விரைகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் விபத்து நடந்த குன்னூர் பகுதிக்கு சென்று மீட்புப்பணி மற்றும் விபத்து தொடர்பாக நேரில் ஆய்வு செய்கிறார்.  சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது மோசமான வானிலை(மேகமூட்டம்) காரணமாக காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதியாக பிபின் ராவத் உட்பட14 பேர் பயணித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், அதில் பயணம் செய்தவர்களின் முழுமையான விபரம் தெரிவிக்கப்படவில்லை. இதனையடுத்து, இந்த விபத்தில் 7 இராணுவ அதிகாரிகள் … Read more

#Breaking:ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – முப்படைத் தளபதியின் நிலை என்ன?,விசாரிக்க உத்தரவு!

நீலகிரி:குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிஹாப்டர் விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இந்திய விமானப்படை(IAF) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது மோசமான வானிலை(மேகமூட்டம்) காரணமாக காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் இருந்துள்ளனர் என்றும்,குறிப்பாக,முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட  14 பேர் பயணம் செய்துள்ளதாகவும் முதற்கட்ட … Read more