#BREAKING : ஆளுநர் முதல்வர் சந்திப்பு நிறைவு..! பேசியது என்ன..?

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் ஆர்.என் ரவியுடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சந்தித்துள்ளார்.  கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ள நிலையில், தற்போது ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்துள்ளார். இந்த  நிலையில் ஆளுநர் மற்றும் முதல்வர் சந்திப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘நீட் தேர்வு விலக்கு தொடர்பான தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம், 2021, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் … Read more

அதிமுக, பாஜகவை மக்கள் புறக்கணிப்பார்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அதிமுக, பாஜக நீட் தேர்வு தொடர்பாக நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம். தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததை தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது. அதன்படி, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டது. இதன்பின்னர் நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான … Read more

#BREAKING: ஆளுநருக்கு எதிராக மாநிலங்களவையில் கடும் அமளி., திமுக எம்பிக்கள் வெளிநடப்பு!

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு மாநிலங்களைவில் தமிழக எம்பிக்கள் கண்டம் முழக்கம். டெல்லி நாடாளுமன்றத்தில் இன்று மாநிலங்களவை தொடங்கி நடைபெற்று வருகிறது. அவை தலைவரான வெங்கையா நாயுடு, முக்கிய விவகாரங்கள் குறித்து பேசுவதற்கான நேரத்தில் யாரெல்லாம் பேசுவதற்கு பெயர் கொடுத்திருந்தார்களோ, அவர்களை பேசும்படி அவர் தலைவர் அழைப்பு விடுத்தார். அப்போது, நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநருக்கு எதிராக மாநிலங்களவையில் திமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் … Read more

நீட் விலக்கு மசோதா, இருமொழிக்கொள்கை – ஆளுநருக்கு அறிக்கை விட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!

நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை. கடந்த ஆண்டு இறுதியில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கும்படி தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இரு மொழி கொள்கையால் எவ்வித பின்னடைவும் இல்லையென்றும் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட்டில் இருந்து விலக்களிக்கும் சட்ட முன்வடிவிற்கு … Read more