#ElectionBreaking:இன்னும் சற்று நேரத்தில்…இந்த பகுதியில் மறுவாக்குப்பதிவு!

கடலூர்:புவனகிரி பேரூராட்சி 4-ம் வார்டு வாக்குச்சாவடி எண் 4 – AVல் இன்று மறுவாக்குபதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி,21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.அதில்,பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றியை பதிவு செய்தது. இதற்கிடையில்,வாக்கு எண்ணிக்கையின் போது,இயந்திரம் பழுதானதால், கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சி 4-ம் … Read more

இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி! நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம்! – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில், இணைந்தே நல்லதோர் தமிழநாட்டை அமைப்போம் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அழைப்பு. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்.19 ஒரேகட்டமாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், பெரும்பாலான இடங்களை கைப்பற்றி திமுக கூட்டணி பெரும் வெற்றியை ருசித்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றியை தொடர்ந்து திமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். … Read more

அதிமுக தோல்வியடைந்ததற்கு என்ன காரணம்? – கருணாஸ் பரபரப்பு அறிக்கை!

துரோகம் செய்தோர் தோல்வியைத்தான் சந்திப்பார்கள், அதிமுகவிற்கு தோல்வியை பரிசாக தந்த மக்களுக்கு நன்றி என கருணாஸ் அறிக்கை. தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற, அதிமுக படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில்,  அதிமுகவிற்கு தோல்வியைக் கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க. வென்றுள்ளது. அஇஅதிமு. சில … Read more

“வெள்ளிக் கொலுசு,ஹாட் பாக்ஸ்,அண்டா என விலைப்பேசப்பட்ட வாக்காளர்கள்” – கமல்ஹாசன் பெருமிதம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு,வெள்ளிக் கொலுசு, ஹாட் பாக்ஸ், அண்டா, பட்டுப் புடவை, ரூ.2000 முதல் ரூ.8000 வரை பணம் என வாக்காளர்கள் விலை பேசப்பட்டபோதும் நேர்மைக்கு வாக்களித்தவர்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்.19  நடைபெற்றது.இதில் 12,602 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி … Read more

#Breaking:தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

மறுவாக்குப் பதிவு நடைபெறும் புவனகிரி பேரூராட்சி பகுதிகள் தவிர மற்ற இடங்களில் பிறப்பிக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தபட்டிருந்தன.இதனிடையே,பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று அதற்கான வாக்கு என்னும் பணிகள் நேற்று முடிவடைந்து,தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில்,மறுவாக்குப் பதிவு நடைபெறும் புவனகிரி பேரூராட்சி பகுதிகள் தவிர மற்ற இடங்களில் பிறப்பிக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்படுவதாக … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் – மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி நிலவரம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்.19 ஒரேகட்டமாக நடைபெற்றது. இதில் 12,602 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 21 மாநகராட்சிகளில் உள்ள மொத்தம் வார்டுகள் 1374: இதில், 1373 இடங்களுக்கான … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : பாஜக தலைவர் அண்ணாமலை நாளை முதல் பரப்புரை..!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நாளை முதல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.  தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்கள் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு … Read more

தேர்தல் பார்வையாளர் செல்போன் எண் வெளியீடு – மாவட்ட ஆட்சி தலைவர்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதேனுமிருப்பின் தேர்தல் பார்வையாளரின் அலைபேசி எண்ணை வெளியிட்ட நாமக்கல் ஆட்சியர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம்காட்டி வருகிறது. இந்த நிலையில், தேர்தல் பார்வையாளர் செல்போன் எண்னை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில், நாமக்கல் மாவட்ட சாதாரண நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளராக ஜெ.இன்னசென்ட் திவ்யா., இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், … Read more

சூப்பர்…தேர்தலுக்கு முன்னரே 3 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!

தேனி:பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டி பேரூராட்சியில் 1,10,11 வார்டுகளில் 3 சுயேட்சைகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜனவரி 28-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக விறுவிறுப்பாக நடந்து வந்த வேட்புமனு தாக்கல் நேற்று  மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில்,வேட்புமனுக்கள் மீதான பரிசீலினை இன்று நடைபெற்று வருகிறது.அதன்படி,முறைப்படி விவரம் இல்லாத மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட உள்ளன.இதனையடுத்து,மனுக்களை திரும்பப்பெற பிப்.7ம் … Read more

வருகின்ற பிப்.25 இவை நடைபெறாது – சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!

சென்னை:எண்ணுர் அனல்மின் நிலைய (1x 660 மெகாவாட்) விரிவாக்கத் திட்டத்திற்காக வருகின்ற பிப்.25 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டமானது நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்.19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.இந்நிலையில்,எண்ணுர் அனல்மின் நிலைய (1x 660 மெகாவாட்) விரிவாக்கத் திட்டத்திற்காக வருகின்ற பிப்.25 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டமானது நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி … Read more