வருகின்ற பிப்.25 இவை நடைபெறாது – சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!

சென்னை:எண்ணுர் அனல்மின் நிலைய (1x 660 மெகாவாட்) விரிவாக்கத் திட்டத்திற்காக வருகின்ற பிப்.25 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டமானது நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்.19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.இந்நிலையில்,எண்ணுர் அனல்மின் நிலைய (1x 660 மெகாவாட்) விரிவாக்கத் திட்டத்திற்காக வருகின்ற பிப்.25 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டமானது நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

“தமிழக தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து,தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து சென்னை மாவட்டம், திருவொற்றியூர் வட்டம், எர்ணாவூர் கிராமத்தில் உள்ள எண்ணுர் அனல்மின் நிலைய (1x 660 மெகாவாட்) விரிவாக்கத் திட்டத்திற்காக வருகின்ற 25-02-2022 அன்று காலை 11.00 மணி அளவில் S.S.S.M ETPS மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பொது மக்கள் கருத்துக் கேட்பு கூட்டமானது நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகிறது”,என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Castro Murugan