பிளாஸ்டிக் பாட்டிலில் மது விற்பனை இல்லை.! உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் திட்டவட்டம்.!

மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டமில்லை – உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் திட்டவட்டம்.  மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்கும் முடிவு இல்லை என டாஸ்மாக் விளக்கம் அளித்துள்ளது. சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்குக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்கும் முடிவு இல்லை என டாஸ்மாக் உறுதியளித்தது. இதனை அடுத்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முடித்துவைக்கப்பட்டது.

இந்த மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்…! ஆட்சியர் அதிரடி உததரவு..!

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மதுபான விற்பனைக்கு தடை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உததரவு.  தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா மற்றும் தேவர் ஜெயந்தி அனுசரிக்கப்படும் நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நாளை மதுபான விற்பனைக்கு தடை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபான கடைகளும், மதுபான கூடங்களும் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும், தடையை மீறி மதுபான விற்பனை, மதுபான … Read more

தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா? – அண்ணாமலை

பத்திரிக்கையாளர்கள் செய்திகள் வெளியிடுவதற்கு முன் அறிவாலயத்தின் அனுமதி பெற வேண்டுமா? என அண்ணாமலை கேள்வி.  அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பதிவுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம். இந்த விற்பனையின் மூலமாக தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு … Read more

தமிழக அரசின் இந்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாத கொடுங்கோன்மையாகும் – சீமான்

ஊதிய உயர்வு உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என சீமான் வலியுறுத்தல்.  ஊதிய உயர்வு உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ’20 ஆண்டுகளாக டாஸ்மாக் ஊழியர்கள் பணியாற்றியும் இதுவரை உரிய ஊதியம் கூட வழங்காமல் கொத்தடிமைகள் போல நடத்தும் தமிழ்நாடு அரசின் செயல் ஏற்றுக்கொள்ள … Read more

அரசு கல்லூரி அருகே டாஸ்மாக்.! 200க்கும் மேற்பட்ட பாமகவினர் போராட்டம்.!

சேலம் மாவட்டம் , சென்னிமலையில் அரசு கல்லூரிக்கு அருகே உள்ளே மதுபான கடையினை அகற்ற கோரி, பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் .  சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சென்னிமலை எனும் இடத்தில் அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரிக்கு அருகே செல்லும் வழியில் அரசு மதுபான கடை உள்ளது. கல்லூரி அருகே டாஸ்மாக் மதுபான கடை இருப்பதால் மாணவர்கள் நலன் பாதிக்கப்படும் என்பதால் அந்த மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என பாமகவினர் … Read more

திருவாரூர் மாவட்டத்தில் இந்த பகுதியில் மட்டும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…!

திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதையொட்டி முத்துப்பேட்டை பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள  டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Breaking:இனி இந்த பகுதியிலும் மதுபாட்டில்களை திரும்ப கொடுத்தால் ரூ.10 கிடைக்கும்- டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மதுபாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.அதன்படி, டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்கள் திரும்ப கொடுத்து விட்டு,பாட்டிலுக்கு கூடுதலாக பெறப்பட்ட ரூ.10-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.காலி மதுபாட்டில்களை சாலையோரங்கள், விளைநிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில் வீசி செல்வதை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே,திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள 10 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.அதன்படி, கொடைக்கானலில் உள்ள 10 … Read more

#Breaking:தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இவ்வளவு கோடிக்கு மது விற்பனையா? – முதலிடத்தில் இந்த மாவட்டமா?..!

தமிழகத்தில் மே தினத்தை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,நேற்று ஒரே நாளில் ரூ.252.34 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.54.89 கோடிக்கும்,சென்னையில் ரூ.52.28 கோடிக்கும்,திருச்சியில் ரூ.49.78 கோடிக்கும் மதுப் பாட்டில்கள் விற்பனையாகியுள்ளது.மேலும்,சேலம் மண்டலத்தில் ரூ.48.67 கோடி,கோவையில் ரூ.46.72 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது.  

மதுப்பிரியர்கள் கவனத்திற்கு…இனி பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூல் – தமிழக அரசு!

நீலகிரி மாவட்டத்தில்,சுற்றுலாப் பயணிகள் மது அருந்தி விட்டு காலி மதுப்பாட்டில்களை ஆங்காங்கே வீசுவதால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும்,குறிப்பாக வனவிலங்குகளுக்கு காயம் ஏற்படுவதாவும் புகார் எழுந்த நிலையில்,இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது,மலைப்பகுதிகளில் உள்ள மதுக்கடைகள்,கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை ஏப்ரல் 25க்குள் வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் கெடு விதித்தது.மீறினால்,மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில்,நீலகிரி மாவட்டதில் உள்ள டாஸ்மாக் … Read more

இந்த நாளில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்..! சிறுபான்மை நல ஆணைய தலைவர் முதல்வரிடம் கோரிக்கை..!

இயேசு பிரான் உயிர் தியாகம் செய்த புனித வெள்ளிக்கிழமை அன்று டாஸ்மாக் கடைகளையும்,மதுக்கூடங்களையும் மூடிட ஆணை பிறப்பிக்கவேண்டுமென்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை வைத்துள்ளார். அதில், ‘உலகெங்கும் இருக்கும் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது உலகின் அனைத்து தரப்பினரும் இயேசு பிரான் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட வெள்ளிக்கிழமையினை துக்கநாளாக “புனித வெள்ளியாக” அனுஷ்டிக்கின்றனர். அன்றைய தினம் இயேசு கிறிஸ்துவின் மாபெரும் தியாகத்தை நினைவு கொள்ளும் வகையில் உண்ணாநோன்பிருந்தும், இரத்த தானம் செய்தும் அவருக்கு … Read more