ஆந்திராவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு..! இன்று முதல் தொடக்கம்.!

Caste Census Andhra Pradesh

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தற்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற குரல்கள் அதிகமாக ஒலிக்க ஆரம்பித்து விட்டன. ஏற்கனவே பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவை அந்நாட்டு மாநில சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டும் விட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல்… வாக்காளர்களுக்கு துரோகம்.! காங்கிரஸ் கடும் எதிர்ப்பு.!  அதேபோல, மற்ற மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அந்தந்த மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு இன்று முதல் … Read more

பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, கெளதம் அதானி மீது அமெரிக்க மருத்துவர் வழக்குப்பதிவு!!

ரிச்மண்டைச் சேர்ந்த இரைப்பைக் குடலியல் நிபுணர் டாக்டர் லோகேஷ் வுயுரு, பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தொழிலதிபர் கெளதம் அதானி, உலகப் பொருளாதார மன்றத்தின் நிறுவனரும் தலைவருமான பேராசிரியர் கிளாஸ் ஸ்வாப் ஆகியோர் மீது அமெரிக்காவில் ஊழல் மற்றும் பெகாசஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளார். கொலம்பியா மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் இந்த தலைவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. … Read more

கொற்றலை ஆற்றின் குறுக்கே 2 அணைகள்.! ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்.!

கொற்றலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணைகள் கட்ட இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  சென்னை மாநகரம் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும், கொற்றலை ஆற்றின் குறுக்கே சித்தூர் மாவட்டத்தில் இரண்டு அணைகள் கட்ட ஆந்திர அரசு முடிவு எடுத்துள்ளது. அதற்கான வேலைகளில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஈடுபட தொடங்கினார். கொற்றலை ஆறு ஓடும் பெரும் பரப்பளவில் சிறிய பகுதி மட்டுமே ஆந்திராவில் இருக்கிறது. … Read more

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நன்றி தெரிவித்த திருமாவளவன்…!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்து திருமாவளவன் அவர்கள் ட்வீட்.  ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் ஆந்திராவில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டத்திற்கு அம்பேத்கர் கோணசீமா என பெயர் வைப்பதற்கான தீர்மானத்தை அம் மாநில அமைச்சரவையில் நிறைவேற்றியுள்ளார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளார். இதற்கு பாராட்டு தெரிவித்து விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரை பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் … Read more

அப்படிப்போடு…ஊழல் புகார் – புதிய செயலியை அறிமுகப்படுத்திய ஆந்திரா முதல்வர்!

ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஊழல் தடுப்புப் பணியகத்தால்(ஏசிபி) உருவாக்கப்பட்ட ‘14400’ செயலியை(ACB mobile app 1440) மக்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளார்.அதன்படி,மாநிலத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் தொடர்பான புகார்களைப் பதிவு செய்யவும்,முழு ஆதார ஆதாரங்களை நீதிமன்றத்தில் வழங்கவும் இந்த செயலி தொடங்கப்பட்டுள்ளது.குறிப்பாக,ஊழல் தொடர்பான புகார் அளிக்க மக்களுக்கு உதவும் வகையில் இந்த அதிநவீன செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி,நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் புகார்களைப் பதிவு செய்வதற்கும் வெளிப்படைத்தன்மையைப் பேணுவதற்கும் ஏசிபி … Read more

ஜெகன் மோகன் ரெட்டியின் புதிய அமைச்சரவையில் ரோஜாவுக்கும் இடம் ஒதுக்கீடு..!

ஜெகன் மோகன் ரெட்டியின் புதிய அமைச்சரவையில் ரோஜாவுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆந்திர மாநிலத்தில் நாளை காலை புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது. இந்த புதிய அமைச்சரவையில் 25 பேருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 15 புதுமுகங்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த புதிய அமைச்சரவையில் நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமாகிய ரோஜாவுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரோஜாவும் நாளை காலை அமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

உயிரிழந்த ராணுவ வீரர் சாய் தேஜா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் – ஆந்திர முதல்வர் அறிவிப்பு!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் சாய் தேஜா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம்,குன்னூரின் காட்டேரி பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து,உடல்கள் எரிந்த நிலையில் இருந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் … Read more