கைது செய்யப்படுவாரா ஹேமந்த் சோரன்.? அடுத்த ஜார்கண்ட் முதல்வர் இவர்தானாம்…

Jharkhand CM Hemant soren and his wife Kalpana

ஜார்கண்ட் மாநிலத்தில் நில மோசடி தொடர்பான வழக்கில் 600 கோடி ரூபாய் அளவில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி, அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை 14 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சூரனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவரிடமும் கடந்த 20ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சண்டிகர் மேயர் தேர்தல் – ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் வழக்கு! … Read more

ஜார்கண்ட் : ரயில் தண்டவாளத்துக்கு வெடிவைத்த நக்சலைட்டுகள்.!

Naxalites - Jharkand

நேற்று (வியாழக்கிழமை) மும்பை – ஹவுரா இடையேயான ரயில்வே வழித்தடத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் மனோகர்பூர் மற்றும் கோயில்கேரா இடையே உள்ள ரயில் பாதையின் ஒரு பகுதியானது மர்ம நபர்களால் வெடி வைத்து சேதப்படுத்தப்பட்டது. நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல்… மத்திய அரசு புதிய முடிவு.! இந்த நாச வேலையை செய்தது நக்சலைட்டுகள் என விசாரணையில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது கோயில்கேரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது.ரயில் தண்டவாளம் சேதம் காரணமாக ஹவுரா-மும்பை வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. … Read more

காங்கிரஸ் எம்பி வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய ரூ.200 கோடி பணம்.? பிரதமர் மோடியின் உத்தரவாதம்.!  

Congress MP Dhiraj sahu - PM Modi

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் (Rajya saba MP) தீரஜ் சாஹு (Dhiraj sahu ) வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.  இந்த சோதனையானது ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் தொடர்ந்தது. இது ஒரு ஜனநாயகப் படுகொலை – மம்தா பானர்ஜி இந்த 3 நாள் அமலாக்கத்துறை சோதனையில் தீரஜ் சாஹு தொடர்புடைய இடங்களில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. எவ்வளவு பணம் என்பது இன்னும் உறுதியாக … Read more

இளம் ஐஏஎஸ் அதிகாரி பூஜா சிங்கலின் 82 கோடிரூபாய் சொத்துக்கள் முடக்கம்.! அமலாக்கத்துறையினர் நடவடிக்கை.!

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைதாகி உள்ள ஜார்கண்ட் மாநில பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா சிங்கலின் 82 கோடிகள் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.  ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்கத்துறை செயலாளராக பணிபுரிந்த ஐஏஎஸ் அதிகாரி பூஜா சிங்கல், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் கமிஷன் பெற்று பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு இருந்தது. தற்போது அவர் தனது பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மீது கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், … Read more

கரும்புகளால் 13 மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்கள்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்கள்..

ஜார்கண்டில் 6ஆம் வகுப்பு மாணவர்கள் 13 பேரை ஆசிரியர் கரும்புகளால் கொடூரமாக தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் கும்லாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர், 6ஆம் வகுப்பு மாணவர்கள் 13பேரை கரும்புகளால் கொடூரமாகத் தாக்கியதைத் தொடர்ந்து மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போது, மாணவர்கள் தனது உத்தரவின் படி நடனமாட மறுத்ததால் கோபமடைந்த ஆசிரியர் மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. ஆசிரியரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் 6-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளியின் வகுப்பறைக்குள் … Read more

5 யூனிட் மின்சாரம் இலவசம்.. ஒரு மரம் வளர்த்தால் போதும்.. மாநில முதல்வர் சூப்பர் அறிவிப்பு.!

ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு மரம் வளர்த்து பராமரித்தால் 5 யூனிட் மின்சாரம் இலவசம் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.  ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது , ஜார்கண்ட் மாநிலத்தில் சமீப காலமாக மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறதாம். அதன் காரணமாக அதனை தடுத்து, மரங்களை பெருக்கும் நோக்கில் , வீட்டில் மரம் வளர்த்து பராமரிப்பவர்களுக்கு 5 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என ராஞ்சியில் நடைபெற்ற விழாவில் பேசிய … Read more

வார விடுமுறை வெள்ளிக்கிழமை.! 33 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய அரசு அதிகாரிகள்…

ஜார்கண்ட் மாநிலத்தில் குறிப்பிட்ட 33 பள்ளிகளில் ஞாயிற்று கிழமை விடுமுறை அளிக்காமல் வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்துள்ளனர்.  இந்தியா முழுவதும் பள்ளி கல்லூரிகள் மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு கூட ஞாயிற்று கிழமை தான் பொது விடுமுறையாக உள்ளது. ஆனால், ஜார்கண்ட் மாநிலத்தில், தும்கா எனும் நகரில் செயல்பட்டு வந்த பள்ளிகளில் 33 பள்ளிகளில் ஞாயிற்று கிழமை விடுமுறை அளிக்காமல் வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாகி உள்ளது. இதனை தொடர்ந்து கல்வி அதிகாரிகள் … Read more

5 வயது சிறுமியயை பலாத்காரம் செய்த 12 வயது சிறுவன் கைது ..!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள குந்தி என்னும் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய 12 வயது சிறுவன் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில், சிறுமி தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் குளிர்பானம் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு தனியாக நின்று கொண்டிருந்த சிறுவன், தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக சிறுமி கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக டோர்பா காவல் நிலையத்தில் வழக்கு … Read more

சரியாக வரி செலுத்துபவர் என்ற முறையில் இதை அறிய விரும்புகிறேன்..! தோனி மனைவியின் அதிரடியான ட்வீட்..!

சரியாக வரி கட்டுபவர் என்ற முறையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இப்போது ஏன் மின்வெட்டு ஏற்படுகிறது என்பதற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன் என தோனியின் மனைவி ட்வீட். கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் அதிகமான வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இந்த கோடை காலங்களில் அனைவருமே, மின்வெட்டு ஏற்படக்கூடாது என்று தான் விரும்புவர். ஆனால், தற்போது நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களில் மின்வெட்டு தொடர்கிறது. அந்த வகையில், மத்திய … Read more

வாங்கி கொடுத்த ஸ்மார்ட் போனை திரும்ப தர மறுத்த காதலி கொலை..!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பாகுர் எனும் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய இருபது வயது கொண்ட பெண் ஒருவர், அப்பகுதியிலேயே வசிக்கும் ஒரு நபரை இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் வெளியில் சுற்றுவது, வீட்டிற்கு வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. மேலும், அந்தப் பெண்ணிற்கு அவரது காதலன் ஒரு ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது காதலனுடன் கால்பந்து போட்டியை காண வெளியே சென்ற பெண், … Read more