தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

Income tax department

IT Raid: தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரில் உள்ள ஒரு தொகுதி மொத்தம் 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடும், வேட்பாளர் பட்டியல், தேர்தல் வாக்குறுதி என தீவிரமாக ஈடுபட்டு … Read more

தமிழ்நாட்டில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

Income tax department

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், குறிப்பாக அமலாக்கத்துறை சோதனையானது தீவிரமாக நடைபெற்று அமைச்சர்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதே வேளையில், வருமானது அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தொழிலதிபர்கள் தொடர்புடைய இடங்களில், பல்வேறு நிறுவனங்கள், குவாரிகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். இதில், ஆவணங்கள், ரொக்க பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், … Read more

அமலாக்கத்துறை அலுவலகத்தில் 14 மணிநேரமாக தொடர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!

Vigilence

சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க மருத்துவர் சுரேஷ் பாவிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் அவர் மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி முதலில் ரூ.20 லட்சம் வாங்கிய நிலையில் மீதமுள்ள ரூ.31 லட்சத்தை வாங்கியபோது திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கினார். 15 மணி நேர விசாரணைக்கு பின்  திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆஜர்படுத்தினர். இந்நிலையில், … Read more

மதுரை மத்திய சிறையில் அதிகாரிகள் சோதனை…!

மதுரை மத்திய சிறையில் சிறை கண்காணிப்பாளர் வசந்த் கண்ணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட சிறை காவலர்கள் சோதனை. மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளின் அறையில் செல்போன் போதைப் பொருட்கள் இருக்கிறதா என சோதனை நடைபெற்று வருகிறது. சிறை கண்காணிப்பாளர் வசந்த் கண்ணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட சிறை காவலர்கள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

பஞ்சாப் முதல்வர் உறவினர் வீடுகளில் அமலாக்க துறையினர் சோதனை…!

இன்று காலை பஞ்சாப் முதல்வர் சரண் ஜித் சிங் சன்னி உறவினர் வீடுகளில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது பெரும்பாலும் மணல் கடத்தல் குறித்த குற்றசாட்டுகள் தான் அதிகளவு பேசப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அவர்களது மருமகனிடம் மணல் கடத்தல் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது. தற்பொழுதும் பஞ்சாப் முதல்வரின் உறவினர்கள் … Read more

வேலூரில் உள்ள ஆவின் பால் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை…!

வேலூரிலுள்ள ஆவின் பால் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தியதில், பொது மேலாளர் காரில் இருந்த பணம் உட்பட ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் வேலூர் – திருவண்ணாமலை மாவட்டங்களை ஒருங்கிணைத்த ஆவின் தலைமையகம் உள்ளது. இதில் தலைமை அலுவலராக பணியாற்றுபவர் அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணிக்கு நெருக்கமானவர் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆவின் நிறுவனத்தில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் … Read more

இருக்கும் சோதனையில் மேலும் ஒரு சோதனை…கொவைட்-19 தாக்கம் அடங்குவதற்க்குள் வட கொரியா ஏவுகனை சோதனை…

உலக நாடுகள் முழுவதும் கொவைட்-19 வைரஸ் குறித்த பீதியும் பயமும் நிலவுகிறது. ஒட்டு மொத்த நாடுகளும் வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில் வட கொரியா மட்டும் ஏவுகனை தயாரிப்பில் இறங்கியுள்ளது. இந்நிலையில், அந்த நாட்டு ராணுவம் கிழக்கு கடல் பகுதியில் நேற்று முன்தினம் குறுகிய துாரம் பாய்ந்து தாக்கக் கூடிய இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது;  இதுகுறித்து தென் கொரியா, இந்த செயல்  முறையற்ற செயல். வட கொரியா தனது  ராணுவ … Read more

வருமானவரி விவாகரம்- தவறு இழைத்தது ஆண்டவனே ஆனாலும் நடவடிக்கை பாயும்.!!செல்லூர் சீறல்

வருமானவரி சோதனையில் சிக்கிய பிகில்..பரப்பான சோதனையில் சிக்கிய 77 கோடி  வருமானவரி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அதில் அரசு தலையிடாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் .சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்றும் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு … Read more