அமலாக்கத்துறை அலுவலகத்தில் 14 மணிநேரமாக தொடர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் 14 மணிநேரமாக தொடர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!

Vigilence

சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க மருத்துவர் சுரேஷ் பாவிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் அவர் மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி முதலில் ரூ.20 லட்சம் வாங்கிய நிலையில் மீதமுள்ள ரூ.31 லட்சத்தை வாங்கியபோது திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கினார்.

15 மணி நேர விசாரணைக்கு பின்  திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆஜர்படுத்தினர். இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 15 நாட்கள் சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அங்கித் திவாரியை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு!

இந்த நிலையில், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விடிய, விடிய லஞ்சஒழிப்பு துறை சோதனை நடத்தி வரும் நிலையில், பாதுகாப்புக்காக வந்த சி.ஆர்.பி.எஃப் படையினரை அலுவலகத்திற்குள் அனுமதிக்க தமிழக காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. 14 மணி நேரமாக  நடைபெற்ற சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Join our channel google news Youtube

உங்களுக்காக