ஒமைக்ரானால் பள்ளி,கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை..? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!

ஒமிக்ரான் பரவல் அச்சுறுத்த‌லால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்ற தகவல் தவறானது. கொரோனா வைரஸ் கடந்த ஒன்றை ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரவி மக்களை பெரும் அச்சுறுத்தி வந்த நிலையில், தற்பொழுது குறைந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ்  கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் இது வேகமாகப் பரவலாம் என்றும் இதுவரை வந்த திரிபுகளில் இது மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும். இந்தப் புதிய வகை … Read more

#Breaking:ஒமைக்ரான் வைரஸ்:3 மணி நேரத்தில் கண்டறியும் வசதியுடன் தமிழகத்தில் 12 ஆய்வகங்கள் அறிமுகம்!

ஒமைக்ரான் வகை வைரஸினை 3 மணி நேரத்தில் கண்டறியும் வசதியுடன் தமிழகத்தில் 12 ஆய்வகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தென் ஆப்பிரிக்க நாட்டில் பரவி வரும் மரபணு மாறிய கொரோனாவான ஒமைக்ரான் வகை வைரஸானது மீண்டும் உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,ஒமைக்ரான் வகை வைரஸினை 3 மணி நேரத்தில் கண்டறியும் வசதியுடன் தமிழகத்தில் 12 அரசு ஆய்வகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி,சென்னை,கோவை,மதுரை,திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் 12 அரசு ஆய்வகங்களில் சோதனை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டேக்பாத் … Read more

ஒமைக்ரான் வைரஸ்:மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? – உச்சநீதிமன்றம் கேள்வி!

உலகையே அச்சுறுத்தும் புதிய வைரஸ் வகை கொரோனா வைரஸினை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ்,தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், இத்தகைய புதிய வகை கொரோனா வைரஸானது புதிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இதற்கு மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு … Read more

அச்சுறுத்தும் ஒமைக்ரான்:ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். நாடு முழுவதும் டெங்கு பரவி வருவதையும், வடகிழக்குப் பருவ மழையும் கருத்தில்கொண்டு,தமிழகத்தில் நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு முன்னதாக அறிவித்திருந்தது. இந்நிலையில்,தமிழகத்தில் நாளையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில்,ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு,உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,தென் … Read more