அச்சுறுத்தும் ஒமைக்ரான்:ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

நாடு முழுவதும் டெங்கு பரவி வருவதையும், வடகிழக்குப் பருவ மழையும் கருத்தில்கொண்டு,தமிழகத்தில் நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு முன்னதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில்,தமிழகத்தில் நாளையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில்,ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு,உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்,தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளை அச்சுறுத்தி வரும் புதிய ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு தமிழகத்தில் பரவாமல் தடுப்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.