கொரோனா பரவல் அதிகரிப்பு – மத்திய அமைச்சர் ஆலோசனை

இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக்கு மாண்டவியா சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றானது தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் தனது தீவிர தாக்குதலை நடத்தியது. இதனால் பலர் பாதிக்கப்பட்டதோடு,  உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது சமீப காலமாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், தற்போது சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொற்று பாதிப்பு … Read more

கார்த்திகை தீப திருவிழா – காவல்துறை திகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை..!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் தீபத்திருவிழாவின் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் தீபத்திருவிழாவின் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். திருவண்ணாமலையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். தீபத்திருவிழா வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 6ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது.

பருவமழை முன்னேற்பாடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து காணொளி மூலமாக ஆலோசனை. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வரும் 5-ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து காணொளி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட … Read more

#BREAKING : தீபாவளி பட்டாசு கட்டுப்பாடு – நாளை மறுநாள் ஆலோசனை…!

சென்னை தலைமை செயலகத்தில், வரும் 28-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஆலோசனை.  சென்னை தலைமை செயலகத்தில், வரும் 28-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசுக்கான கட்டுப்பாடுகள் குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், பட்டாசு வெடிப்பதற்கான நேரக்காட்டுப்பாடு, பசுமை பட்டாசு பயன்பாடுகளின் முக்கியத்துவம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், தடைசெய்யப்பட்ட சீன பட்டாசு விற்பனையை கண்காணிப்பது பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் – தலைமை செயலாளர் இன்று ஆலோசனை

காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை.  தமிழகத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை அரசு தொடக்க பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு இருந்தது. அதில், சிற்றுண்டி வகைகளிலிருந்து ஏதாவது ஒரு சிற்றுண்டியினை அனைத்து பள்ளி வேலைநாட்களிலும் வழங்க வேண்டும். ஒவ்வொரு வாரத்திலும் குறைந்தது 2 நாட்களிலாவது, அந்த பகுதிகளில் விளையும் சிறுதானிகள் அடிப்படையில் சிற்றுண்டி வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு … Read more

அனைத்து துறை சார்ந்த செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை.

அனைத்து துறை சார்ந்த செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 6 மணி அளவில், அனைத்து துறை சார்ந்த செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஒவ்வொரு துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை..!

தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை. தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அவர்கள், இன்று தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டை இணைக்கும் பணி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.  நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி இன்று  முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

செஸ் ஒலிம்பியாட் – தலைமை செயலாளர் ஆலோசனை

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த தமிழக … Read more

செஸ் ஒலிம்பியாட் – தலைமை செயலாளர் ஆலோசனை

இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக செய்ய வேண்டிய பணிகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.  சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த பணிகள் குறித்து … Read more

பொங்கல் பரிசுத் தொகுப்பு புகார்;முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

சென்னை:பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்ததில் பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில்,உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகம் முழுவதும்,பொங்கலை முன்னிட்டு அரிசி,வெல்லம் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பரிசுத் தொகுப்பு ரூ.1,297 கோடி மதிப்பில் 95 சதவிகித குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.இருப்பினும்,இந்த பொங்கல் தொகுப்பு தரமற்றதாக வழங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் சில வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இதனையடுத்து,பொங்கல் பரிசுத் தொகுப்பு … Read more