பல்டி அடித்த ஜெயா டிவி சிஇஓ !ஜெயலலிதாவை நேரில் பார்க்கவில்லை …

இளவரசியின் மகனும் ஜெயா டி.வி.தலைமைச் செயலதிகாரியுமான விவேக் ஜெயராமன் ஜெயலலிதாவை மருத்துவமனையில் தான் நேரில் பார்க்கவில்லை என்று  ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஆறுமுகசாமி ஆணையம் அனுப்பிய சம்மனின் பேரில் இன்று ஆஜரான விவேக் ஜெயராமனிடம் சுமார் மூன்றரை மணிநேரம் விசாரணை நடைபெற்றது. அப்போது ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தான் வெளிநாட்டில் இருந்ததாகவும், மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவை தான் பார்க்கவில்லை என்றும் விவேக் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய … Read more

விபச்சாரக் கும்பல் தன்னை அணுகியது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெளியிட்டார் அமலா பால்!

நடிகை அமலாபால் பிரைவேட் பார்ட்டிக்கு தன்னை அணுகிய விபச்சாரக் கும்பல் தொடர்பான அனைத்து விவரங்களையும் போலீசார் வெளியிட வேண்டும் என நடிகை அமலாபால் வலியுறுத்தியுள்ளார். தமிழ், மலையாள திரையுலகில் முன்னணி நடிகையான அமலா பால் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசிய நிகழ்ச்சிக்காக, சென்னை தியாகராயர் நகர் பகுதியில் உள்ள தனியார் நடன பள்ளி ஒன்றில் ஜனவரி 31ஆம் தேதி பயிற்சியில் ஈடுபட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.   அப்போது தன்னை அணுகிய நபர், மலேசிய நிகழ்ச்சிக்குப் பிறகு பிரைவேட் பார்ட்டி ஒன்று இருப்பதாகவும், … Read more

ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டது உலகத் தமிழர்களுக்கு அவமானம்!

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்  சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டது உலகத் தமிழர்களுக்கு அவமானம் என தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற அன்புமணி ராமதாஸ் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நடைபெறும் ஊழலை மத்திய அரசு ஆதரிப்பதாக குற்றம் சாட்டினார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வீட்டில் சோதனைகள் நடைபெற்ற போதிலும் மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் அன்புமணி தெரிவித்தார்… … Read more

மு.க.ஸ்டாலின்  சென்னை அண்ணா அறிவாலயத்தில், நாமக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை!

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  சென்னை அண்ணா அறிவாலயத்தில், நாமக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். உள்ளாட்சித் தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மு.க.ஸ்டாலின், திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகளை இன்று 7வது நாளாக சந்தித்து வருகிறார். காலையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்த அவர், மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை மற்றும் குறைகளை கேட்டறிந்தார். திமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என … Read more

சென்னையில்  செயின் பறிக்கும் போது சாலையில் பெண் இழுத்து செல்லப்பட்ட கொடூர காட்சி வெளியீடு!

செயின் மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் சென்னையில்  தொடர் கதையாக நடந்து வருகிறது. தினமும் சராசரியாக 5-க்கும் மேற்பட்ட பெண்களிடம் நகை பறிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செயின் பறிப்பு நடைபெறுவதும், குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், இந்த வகை குற்றங்கள் முற்றிலும் கட்டுக்குள் வரவில்லை. இதனால், சாலையில் நடந்து செல்லவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பெண்கள் கவலை தெரிவிக்கின்றனர். தனியாக செல்லும் பெண்களின் செயின் பறிக்கும் நிலை மாறி தற்போது கணவருடன் செல்லும்போது, … Read more

சென்னையில் வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாக மோசடி!

சென்னையில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 2 லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி ஐஃஎப்எஸ் அதிகாரி  கைது செய்யப்பட்டார். பெரியமேடு பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்பவர் புரசைவாக்கத்தில் துணிக்கடை வைத்துள்ளார். இவரிடம் கோகுலகிருஷ்ண ஹரி என்பவர், தன்னை ஒரு ஐஎப்எஸ் அதிகாரி என்றும், பலருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய இம்ரான் தனது மைத்துனரின் வெளிநாட்டு வேலைக்காக 2 லட்சம் ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய ஹரி தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் … Read more

ஜெயலலிதா படம் பிப்ரவரி 12ந் தேதி சட்டப்பேரவையில் திறக்கப்படுகிறது!

நாளை மறுநாள் தமிழக சட்டப்பேரவையில்  ஜெயலலிதாவின் படம் திறந்துவைக்கப்படுகிறது. இதுதொடர்பாக சட்டப்பேரவைச் செயலாளர் பூபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 12-ஆம் தேதி காலை சட்டப்பேரவை மண்டபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையிலும் நடைபெறும் நிகழ்ச்சியில், ஜெயலலிதா படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.  

இளையராஜாவின் மகன் பெருமிதம் !தனது தந்தைக்கு பத்ம விபூஷண் விருது குறித்து பெருமிதம் ….

இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா புகழ்பெற்ற மனிதர்களாலேயே விருதுகளுக்கு பெருமை என்றும், தனது தந்தைக்கு பத்ம விபூஷண் விருது மகிழ்ச்சியளிப்பதாக  கூறியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காலம் தாழ்த்தி வழங்கப்பட்டாலும் தனது தந்தை இளையராஜாவுக்கு விருது வழங்கட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்க கூடியது என்றார். கடந்த மாதம்  25ஆம்  தேதி  இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.  

தீபா வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி வந்த போலி அதிகாரி தப்பி ஓட்டம்!

வருமான வரித்துறை அதிகாரி என கூறிக்கொண்டு ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா வீட்டுக்கு வந்த போலி நபரை காவல்துறை உதவி ஆணையர், ஆய்வாளர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போலீசார் இருந்தும் தப்பியோடியுள்ளார். சென்னை தியாகராயநகர் சிவஞானம் தெருவில் தீபாவின் வீடு உள்ளது. இங்கு இன்று காலை 5 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரி என கூறிக்கொண்டு வந்த நபர் சோதனைக்கு மற்ற அதிகாரிகள் 10 மணிக்கு வருவார்கள் என்று தெரிவித்தார். தனது பெயர் மிதேஷ்குமார் என்றும் வருமான … Read more

உயர்நீதிமன்றத்தில் தீபா மீது வழக்குப் பதியக்கோரி வழக்கு!

சென்னை உயர்நீதிமன்றம் பணமோசடிப் புகாரில் புகாரில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிலளிக்க  உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அமைச்சராக்குவதாகக் கூறி  80 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த முட்டை வியாபாரி ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த முட்டை மொத்த வியாபாரி ராமச்சந்திரன் காவல் ஆணையர் … Read more