6 வயது மகனை கழுத்தை அறுத்து கொன்ற தாய் – கடவுள் உத்தரவால் கொலை செய்ததாக வாக்குமூலம்!

தனது 6 வயது மகனை குளியலறைக்குள் தூக்கி சென்று கத்தியை வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, அவன் சிறிது நேரத்தில் உயிர் பெறுவான் எனவும், கடவுள் உத்தரவால் தான் இவ்வாறு செய்ததாகவும் மகனின் தாய் சஹீதா கூறியுள்ளார்.  கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு அருகே உள்ள பூலகாட் எனும் பகுதியை சேர்ந்த சுலைமான் சஹீதா ஆகிய தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அருகிலுள்ள மதரசாவில் சஹீதா ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறாராம். இந்நிலையில், மீண்டும் … Read more

ஆப்கானிஸ்தானுக்கு பரிசாக 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கிய இந்தியா!

இந்தியாவால் தயாரிக்கப்பட்டுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசிகளில் 5 லட்சம் தடுப்பூசிகள் ஆப்கானிஸ்தானுக்கு பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது.  கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்த க்ளோரோனா வைரஸின் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பல நாடுகள் இதற்கான தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வந்தது. அதில் இந்தியாயாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்ட் எனும் தடுப்பூசிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியாவின் … Read more

உங்க கிட்சனிலும் இதே போன்ற பூச்சிகளின் தொல்லை உள்ளதா?

சமையலறை சுத்தமாக அழகாக இருக்க வேண்டும் என பெண்கள் விரும்புவது வழக்கம் தான். எவ்வளவு தான் சுத்தமாக வைத்திருந்தாலும் சமயலறையில் இருக்கும் சில பொருட்களால் சின்ன பூச்சிகள் வந்து ஆக்கிரமித்து விடுகிறது. இந்த பூச்சிகளை செலவில்லாமல் ஈசியாக ஒழிப்பதற்கான சில வழிமுறைகளை நாம் பார்க்கலாம் வாருங்கள்.  பூச்சிகளின் தொல்லை அகற்றும் வழிகள் முதலில் வீட்டிலுள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை எடுத்து வெட்டி வைத்துக்கொண்டு அதில் தண்ணீர் மற்றும் சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்கு கனிந்த வாழைப்பழ … Read more

பவானி ஆற்றுப்படுகையில் இன்று முதல் துவங்குகிறது யானைகள் நலவாழ்வு முகாம்!

48 நாட்கள் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் பவானி ஆற்றுப்படுகையில் யானைகளுக்கான இந்த முகாம் துவங்குகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி என்னுமிடத்தில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் 48 நாட்கள் நடத்த வேண்டும் என தமிழக அரசால் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இதற்கான அரசாணையும் அன்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் யானைகளுக்கு நடைபெறக்கூடிய இந்த சிறப்பு முகாமில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட … Read more

இதுவரை இந்தியாவில் 50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது – மத்திய அரசு!

இதுவரையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி 50 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தடுப்பூசி பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்டது. அதில் இந்தியாவில் கண்டறியப்பட்ட இரண்டு தடுப்பூசிகளும் அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், கோவிஷீல்ட் எனும் தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி இந்தியாவில் போடுவதற்கான பணிகள் துவங்கப்பட்டது. இதனையடுத்து முன்கள வீரர்களுக்கும் சுகாதார பணியாளர்களுக்கு முதற்கட்டமாக … Read more

திமுக எம்.பி கனிமொழி இன்று மதுரையில் சுற்றுப்பயணம்!

திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமாகிய கனிமொழி இன்று மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திமுக மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி இன்று மதுரை தெற்கு மாவட்ட பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மதுரை ஆர்.டி.ராகவையார் மகாலில் அனைத்து சமுதாய சங்கங்களின் நிர்வாகிகளை காலை 9 மணிக்கு பின் சந்திக்க உள்ள கனிமொழி, 10 மணிக்கு ஜீவாநகர் செல்ல உள்ளதாகவும் அதன் பின் அப்பள தொழிற்சாலைகளில் பணி புரிய கூடிய பெண் தொழிலாளர்களுடன் உரையாட உள்ளதாகவும் கூறப்படுகிறது. … Read more

ஸ்டாலினுக்கு பெருமாள் மீது நம்பிக்கை உள்ளது – மூதாட்டிக்கு பதிலளித்த துர்கா ஸ்டாலின்!

தூத்துக்குடியில் பெருமாள் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று இருந்த ஸ்டாலின் அவர்களின் மனைவியிடம் மூதாட்டி ஒருவர் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் கோவிலுக்கு செல்வார்களா என கேள்வி எழுப்பியதற்கு ஸ்டாலினுக்கு பெருமாள் மீது நம்பிக்கை உள்ளது எனவும் அவர் கோவிலுக்கு வருவார் எனவும் துர்கா ஸ்டாலின் பதிலளித்து சென்றுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் களக்காடு பகுதியில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரம் முடிந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் உடன் சென்று இருந்தவர்களுடன் … Read more

உத்திர பிரதேசத்தில் கள்ளக்காதலர்கள் முகத்தில் கரியை பூசி, மொட்டையடித்து, செருப்பு மாலை அணிவித்த உள்ளூர் வாசிகள்!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் கள்ள தொடர்பு இருப்பதாக கூறி இருவர் முகத்தில் கரியை பூசி அவர்களுக்கு செருப்பு மாலை அணிவித்து அடித்த உள்ளூர்வாசிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகியதை அடுத்து, காவலர்கள் தாக்குதல் நடத்திய மூவரை கைது செய்துள்ளனர். பொதுவாக தற்போதைய காலகட்டத்தில் கணவன், மனைவி எனும் புனிதமான உறவை தவிர்த்து மற்றொரு தகாத உறவுக்குள்ளும் சிலர் சென்றுவிடுவதால் குடும்பம் குழைந்து விடுவதுடன், பிறர் நிம்மதியும் கெடுகிறது. இதில் குடும்பத்தினர் தலையிட முடியாத பட்சத்தில் வெளியிலுள்ள மக்கள் … Read more

பத்தாயிரத்துக்கும் அதிகமானோரின் படுகொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி 95 வயது மூதாட்டி மீது வழக்கு பதிவு!

இரண்டாம் உலகப் போரின் போது நாஜி முகாமில் படுகொலை செய்யப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் மரணத்திற்கு உடந்தையாக இருந்ததாக கூறி 95 வயது முன்னாள் பெண் செயலாளரான மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 1943 மற்றும் 1945 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது நாஜி முகாமில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த காலகட்டத்தில் முன்னாள் பெண் செயலாளராக ஒரு பெண்மணி பணியாற்றியுள்ளார். அப்பொழுது நாஜியால் ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தின் … Read more

இளைஞரின் கண்ணைக்கட்டி காட்டில் வைத்து தாக்கிய கும்பல் கைது!

திருடி விட்டதாக கூறி இளைஞரின் கண்ணை கட்டி வைத்து காட்டில் பிரம்பால் அடித்து தாக்கிய கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் தாலுக்கா பூண்டி மேல தெருவில் வசித்து வரக்கூடிய குணசேகரன் என்பவனின் மகன் தான் ராகுல். கூலித்தொழில் செய்து வரக்கூடிய ராகுல் திருடி விட்டதாக கூறி அந்த ஊரில் இருக்ககூடிய சில  இளைஞர்கள் சேர்ந்து ராகுலின் கண்ணை கட்டி வைத்து அருகே உள்ள காட்டிற்கு அழைத்துச் சென்று மரத்தில் பிடித்து வைத்துக்கொண்டு … Read more