உங்க கிட்சனிலும் இதே போன்ற பூச்சிகளின் தொல்லை உள்ளதா?

சமையலறை சுத்தமாக அழகாக இருக்க வேண்டும் என பெண்கள் விரும்புவது வழக்கம் தான். எவ்வளவு தான் சுத்தமாக வைத்திருந்தாலும் சமயலறையில் இருக்கும் சில பொருட்களால் சின்ன பூச்சிகள் வந்து ஆக்கிரமித்து விடுகிறது. இந்த பூச்சிகளை செலவில்லாமல் ஈசியாக ஒழிப்பதற்கான சில வழிமுறைகளை நாம் பார்க்கலாம் வாருங்கள். 

பூச்சிகளின் தொல்லை அகற்றும் வழிகள்

முதலில் வீட்டிலுள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை எடுத்து வெட்டி வைத்துக்கொண்டு அதில் தண்ணீர் மற்றும் சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்கு கனிந்த வாழைப்பழ துண்டுகள் இரண்டை போட்டு வைத்து கொள்ளவும். அதன் பின் அதை பிளாஸ்டிக் கவர் வைத்து மூடி ரப்பர் பேண்ட் வைத்து கட்டி, சிறு சிறு துளைகள் போட்டு வைக்கவும். இந்த வாசனையில் ஈக்கள் ஈர்க்கப்பட்டு உள்ளே விழுந்துவிடும்.

அதே போல ஒரு திறந்த பாட்டிலில் சிறிதளவு தண்ணீருடன் தேன் கலந்து சுருள் போல போட்டு வைத்து விட்டால் ஈக்கள் அந்த வாசனையிலும் ஈர்க்கப்பட்டு உள்ளே விழுந்து விடும். முடிந்தவரை இனிப்பான பொருட்களை முடிந்த வரை மூடி வைத்து உபயோகியுங்கள், இல்லாத பட்சத்தில் இது போன்ற பாட்டில்கள் மூலம் செலவில்லாமல் ஈக்களை விரட்டியடியுங்கள்.

author avatar
Rebekal