இன்று மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

இன்று மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிப்பு. தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில், கமலஹாசன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், துணை பொது செயலாளர் ராதிகா, இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் நேற்று தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நேற்று … Read more

#ElectionBreaking : அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் இறுதியானது…! 23 தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியீடு…!

அதிமுக கூட்டணியில், பாமக போட்டியிடும் 23 தொகுதிகளின் பட்டியல் இன்று  வெளியிடப்படும் என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக செயல்பட்டு  வருகிறது. அதிமுக தலைமையகத்தில் வைத்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் உடன்  ஜி.கே.மணி ஆலோசனை நடத்திய பின், செய்தியாளர்களை சந்தித்து  பேசினார். அப்போது பேசிய அவர், அதிமுக கூட்டணியில், பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டதாகவும், அதிமுக கூட்டணியில், பாமக … Read more

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பாஜக தேசிய தலைவர்…!

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில், கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார். இந்தியாவில்,கடந்த 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில், அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் தடுப்பூசி போட்டு  வருகின்றனர் அந்த வகையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில், கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார். இதற்க்கு முன், பாஜக மூத்த … Read more

ரயில் பயணம் தொடர்பான சந்தேகங்களுக்கு இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்…!

ரயில் பயணம் குறித்த அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் ஒரே ஹெல்ப்லைன் எண்ணின் கீழ் தீர்வு கிடைக்கும் வகையில், இந்திய ரயில்வே துறை 139 என்ற எண்ணை அறிமுகம் செய்துள்ளது. இன்று அதிகமானோர் பேருந்து பயணத்தை விட ரயில் பயணத்தில் கட்டணம் குறைவானது என்பதால்,  ரயில் பயணத்தை தான் விரும்புகின்றனர். இந்நிலையில் ரயில் பயணம் குறித்த அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் ஒரே ஹெல்ப்லைன் எண்ணின் கீழ் தீர்வு கிடைக்கும் வகையில், இந்திய ரயில்வே துறை 139 என்ற எண்ணை … Read more

இளைஞர்களுடன் இணைந்து கபடி விளையாடிய ரோஜா…!

ரோஜா இளைஞர்களுடன் திடீரென்று களத்தில் இறங்கி கபடி விளையாடி உள்ளார். நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர். இந்நிலையில், நகரி பகுதியில் நடைபெற்ற கபடி போட்டியை தொடங்கி வைக்குமாறு ரோஜா சென்று இருந்தார். அப்போது அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். இவர்களின் வரவேற்பில் உற்சாகமடைந்த ரோஜா இளைஞர்களுடன் திடீரென்று களத்தில் இறங்கி கபடி விளையாடி உள்ளார். ரோஜாவின் இந்த செயல் … Read more

சிரிய அதிபர் மற்றும் மனைவிக்கு கொரோனா தொற்று…!

சிரிய அதிபரான ஆசாத் மற்றும் அவரது மனைவி அஸ்மா அல் ஆசாத் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்று பரவி வருகிற நிலையில், உலக நாடுகள் இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த வைரஸானது பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரையும் பாதித்துள்ளது. தற்போது தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும், புதிதாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், சிரிய … Read more

கொரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்வதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது…! – கீதா கோபிநாத்

சர்வதேச செலவாணி நிதியத்தின்  தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத், இந்தியாவின் கொரோன தடுப்பூசி கொள்கை மிகச் சிறப்பாக உள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளது.  கொரோனா வைரஸை தடுக்க தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்தியா முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கோவீஷீல்டு, கோவாக்சின் போன்ற தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதுகுறித்து சர்வதேச செலவாணி நிதியத்தின்  … Read more

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பாஜக மூத்த தலைவர்…!

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்டார்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.  இந்தியாவில்,கடந்த 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில், அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் … Read more

கொல்கத்தா தீ விபத்து…! உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்…! – மம்தா பானர்ஜி

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.   கொல்கத்தாவின் மையப்பகுதியான தென்கிழக்கு மற்றும் கிழக்கு ரயில்வே மண்டலங்களின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று மாலை 6 மணியளவில், இந்த கட்டடத்தின் 13வது மாடியில்தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ  மற்ற கட்டடங்களுக்கு பரவிய நிலையில், 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் தீயை … Read more

#ElectionBreaking : அர்ஜுன் மூர்த்திக்கு ரோபோ சின்னம் ஒதுக்கீடு…!

அர்ஜுன் மூர்த்தியின், இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ரோபோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக இறங்கி வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக கூறப்பட்ட போது, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன் மூர்த்தி நியமிக்கப்பட்டார். ஆனால், ரஜினி கட்சி தொடங்கவில்லை என அறிவிப்பு வெளியிட்ட பின், அர்ஜுன் மூர்த்தி, ‘இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி, … Read more