எடப்பாடி பழனிசாமி போலி விவசாயியாக நாடகமாடுகிறார் – எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாத போலி விவசாயி எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு வெற்று அறிக்கையினை வெளியிடுகிறார்.  தமிழக எதிர்க்கட்சி தலைவர் டெல்டா மாவட்டங்களில் மழையினால் மூழ்கி சேதமடைந்த குறுவை பயிர்களுக்கான கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி பாதிப்படைந்த விவசாயிகளுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டுமென தெரிவித்து அறிக்கை  வெளியிட்டிருந்தார். இதுகுறித்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழக … Read more

வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள மெகபூபா முப்தி…!

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா காஷ்மீரில் இருக்கும் நிலையில், மெகபூபா முக்தி வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஒரு முன்னாள் முதல்-மந்திரியின் அடிப்படை உரிமை பறிக்கப்படுகிறது என்றால் சாதாரண மனிதர்களின் நிலையை நினைத்து பார்க்க முடியாது என்று குற்றம்சாட்டியுள்ள அவர் வடக்கு காஷ்மீரின் பட்டான் நகருக்கு செல்வதை தடுக்கும் வகையில் தான் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக அவர் … Read more

மனு என்ற பெயரை கேட்டாலே பலருக்கு அலர்ஜியாக இருக்கிறது -தமிழிசை செளந்தரராஜன்

பசுவின் கன்றை கொன்றதால் தனது மகனையே தேர்க்காலில் ஏற்றி கொன்ற மனுநீதி சோழன் வாழ்ந்த பூமி நமது தமிழகம் என்பதில் பெருமை என ஆளுநர் தமிழிசை பேச்சு. புதுச்சேரியின் காரைக்கால் கடற்கரை சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக நீதித் துறை குற்றவியல் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்ற கட்டடத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் தமிழிசை, ஏழை எளியோருக்கு மருத்துவம் கிடைப்பது … Read more

செக் குடியரசு நாட்டிற்கு சென்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன்,..! என்ன காரணம்…?

செக் குடியரசு நாட்டிற்கு சென்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன்.  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் . திரு.தா.மோ.அநபராசன் அவர்கள் செக் குடியரசு நாட்டில் உள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க உள்ளார். இதுகுறித்து  குறிப்பில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ் நாட்டினை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக உருவாக்கிட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் பல்வேறு … Read more

பயங்கரவாதிகளின் கைக்கூலி திருமாவளவன்..!முதல்வர் ஸ்டாலின் மிகவும் நல்லவர் – எச்.ராஜா

தமிழ் மக்களின் விரோத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என எச்.ராஜாபேச்சு.  பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘சட்டப்படி தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசுவது குற்றச் செயல்; 11ம் தேதி திருமாவளவன் நடத்தும் மனித சங்கிலிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது. பயங்கரவாதிகளின் கைக்கூலி திருமாவளவன். அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; விசிக-வை தடை செய்ய வேண்டும். திருமாவளவன்,சீமான் இருவரும் தேச … Read more

அக்டோபர் 15ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5% சலுகை..!

அக்டோபர் 15ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினார் 5% சலுகை அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு.  2022- 23 ஆம் நிதி ஆண்டின் முதல் அரையாண்டு கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. முதல் அரையாண்டில் மட்டும் ரூபாய் 945 கோடி மொத்த வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், டந்த முதல் அரையாண்டை விட 208 கோடி ரூபாய் அதிகம். அதே போல் தொழில்வரி ஆனது 248 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அக்டோபர் … Read more

இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு. தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட 18 மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாளும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளுக்கு … Read more

ஆளுநர் மாளிகை அருகே மத்திய அரசை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்…!

மத்திய அரசை கண்டித்து நாளை ஆளுநர் மாளிகை அருகே, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில்  ஆர்ப்பாட்டம். மத்திய அரசை கண்டித்து நாளை ஆளுநர் மாளிகை அருகே, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர், இரா.முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் த.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் … Read more

மகளீர் இலவச பேருந்து – இந்த செய்தி வதந்தி : அமைச்சர் சிவசங்கர்

மகளிர் இலவச பேருந்தில் விருப்பப்பட்டால் கட்டணம் என்பது ‘வதந்தி’ என அமைச்சர் சிவசங்கர் ட்வீட்.  அமைச்சர் பொன்முடி, ஒரு மேடையில் ஓசியில் பெண்கள் பேருந்தில் பயணம் செய்வதாக கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனை தொடர்ந்து மூதாட்டி ஒருவர், நான் இலவசமாக பயணம் செய்யமாட்டேன். பணம் கொடுத்து தான் பயணம் செய்வேன் என கூறி நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், … Read more

கடலுக்கு நடுவில் பேனா நினைவு சின்னம் – தமிழக அரசுக்கு மத்திய அரசின் சுற்று சூழல் துறை கடிதம்

கடலுக்கு நடுவில் பேனா நினைவு சின்னம்  அமைப்பது குறித்து தமிழக அரசுக்கு மத்திய அரசின் சுற்று சூழல் துறை கடிதம். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக வங்க கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்பட உள்ளது. கருணாநிதி நினைவிடத்தின் பின்பகுதியில் கடலுக்குள் 42மீ உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கடலுக்குள் ரூ.81 கோடி செலவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. இந்த நிலையில், … Read more