#Breaking:இல்லத்தரசிகள் ஷாக்…சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு –

கடந்த மே 1 ஆம் தேதி 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள்  ரூ.102.50 உயர்த்தின.வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது பேக்கரி,தேநீர் கடை உள்ளிட்ட நடுத்தர தொழில் முனைவோருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதன்பின்னர் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.50 அதிகரித்தன.இதனால்,சிலிண்டர் விலை ரூ.965 லிருந்து ரூ.1015 ஆக உயர்ந்தது.ஆனால்,இதற்கான மானியம் ரூ.25 மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நிலையில்,சென்னையில் வீடு மற்றும் வணிக உபயோகத்திற்கான … Read more

#Alert:தமிழகத்தில் இன்று இடி,மின்னலுடன் கனமழை;சூறாவளிக் காற்று -எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?..!

வட உள்தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி,நீலகிரி,கோவை,திருப்பூர்,ஈரோடு,கிருஷ்ணகிரி,தருமபுரி, சேலம்,திருப்பத்தூர்,நாமக்கல்,வேலூர்,ராணிப்பேட்டை,திருவள்ளூர், திருவண்ணாமலை,காஞ்சிபுரம்,கள்ளக்குறிச்சி,திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் … Read more

#Breaking:வேதனையான செய்தி;உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

திருநெல்வேலியின்,தருவை கிராம அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த மே 14 ஆம் தேதியன்று திடீரென மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் 3 ஜேசிபி ஆபரேட்டர்கள் 2 லாரி ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர் ஒருவர் என மொத்தம் 6 ஊழியர்கள் சிக்கிய நிலையில்,இருவர் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளனர்.மேலும்,விபத்து நடந்த இடத்தில் மாவட்ட நிர்வாகம் காவல்துறை,தீயணைப்புத்துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மூலமாக தீவிர மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,நெல்லை … Read more

#Breaking:5 மணி நேரத்திற்கும் மேல்….இதனால்தான் சோதனை – காங்.MLA செல்வப்பெருந்தகை!

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான      ப. சிதம்பரத்தின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேசமயம்,அவரது மகனான கார்த்தி சிதம்பரத்தின் வீடு,அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2010 முதல் 2014 வரை சீனர்கள் இந்தியா வர சட்ட விரோதமாக சுமார் 250 விசாக்கள் வாங்கி பெற்று தர ரூ.50 … Read more

#Breaking:இல்லத்தரசிகள் ஷாக்…தங்கம் விலை கிடுகிடு உயர்வு – ஒரு சவரன் விலை என்ன தெரியுமா?..!

பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும்.மேலும்,ஏதாவது முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள்.இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு. இதனிடையே,கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில்,சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து ரூ.38,168-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.43 உயர்ந்து,ஒரு கிராம் … Read more

குட்நியூஸ்…உணவு தொடர்பான புகார்;72 மணி நேரத்திற்குள் நடவடிக்கை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி உத்தரவு!

கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஐடியல் என்ற உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை வாங்கி சாப்பிட்ட, கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி அண்மையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக உணவகங்களில் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த வேளையில்,தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதனால்,தமிழகத்தில் ஷவர்மாவை விற்க தேவையான அடிப்படை … Read more

#Breaking:சற்று முன்…காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ ரெய்டு!

காங்கிரஸ் மூத்த தலைவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்தின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய பல இடங்களில் மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி,டெல்லி,மும்பை சென்னை மற்றும் தமிழகத்தில் சிவகங்கை ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக,அவரது மகன் எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்பான நிறுவனங்களுக்கு 2010 மற்றும் 2014 ஆகிய வருடங்களுக்கு இடையே வெளிநாட்டில் இருந்து பணம் வந்தது  தொடர்பாக,முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது … Read more

#Breaking:மக்களே கவலை வேண்டாம்…மீண்டும் 2 ஆயிரத்துக்கு கீழ் சரிந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு நாளில் 2,202 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 1,569 ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,25,370 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா இறப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆக பதிவாகியுள்ளது.மேலும்,இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,260 ஆக பதிவாகியுள்ளது.அதைப்போல,கடந்த … Read more

#Shocking:புரட்டிப்போட்ட கனமழை-2 லட்சம் பேர் பாதிப்பு;வெள்ளத்தில் சிக்கிய யானை!வீடியோ உள்ளே!

அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் 20 மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக திமா ஹசாவோ என்ற மலை மாவட்டமானது மாநிலத்தின் மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதனிடையே,வெள்ளத்தில் சிக்கி கச்சார் மாவட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும்,அதே நேரத்தில் டிமா ஹசாவோ என்ற பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மூன்று பேர் … Read more

#Justnow:மேலும் 256 நடமாடும் மருத்துவமனை சேவை – இன்று தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

மக்களை தேடி மருத்தவம் திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு மருத்துவ சேவை வழங்க ரூ.70 கோடி மதிப்புள்ள 389 வாகனங்கள் மூலம் நடமாடும் மருத்துவமனை சேவையை கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில்,சென்னையில் இரண்டாம் கட்டமாக 256 நடமாடும் மருத்துவமனை சேவையை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.அதன்படி,ஒய்எம்சிஏ மைதானத்தில் நடமாடும் மருத்துவமனை சேவையை முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார். அதன்படி,நடமாடும் மருத்துவமனையில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் … Read more