“பேரறிவாளன் எந்த குற்றமும் அற்றவர்” – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகால சட்டப்போராட்டத்துக்கு பிறகு, கிட்டத்தட்ட 31 ஆண்டுகளுக்கு சிறை கம்பிகள் இடையே வாழ்ந்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. பேரறிவாளனின் விடுதலை தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. 161-வது சட்ட பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தினால், சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றமே … Read more

#Breaking:ஜிஎஸ்டி குழு பரிந்துரை மாநிலங்களை கட்டுப்படுத்தாது – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய ,மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.மேலும்,இந்தியா கூட்டாட்சி தத்துவ நாடு என்பதால் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைக்கு நம்பத் தகுந்த மதிப்பு மட்டுமே உண்டு எனவும், ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் என உத்தரவிட்டால் நாட்டின் கூட்டாட்சி அமைப்பு பாதிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனம் ஜிஎஸ்டி ரீதியான சில குழப்பங்களுக்காக அம்மாநில உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் பணி என்பது … Read more

#CUETPG:இன்று முதல்…இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் – UGC முக்கிய அறிவிப்பு!

நடப்பு ஆண்டு முதல் முதுகலை படிப்புகளுக்கான பொதுவான பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை (CUET) அறிமுகப்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு (UGC) முடிவு செய்திருந்தது. இந்நிலையில்,முதுநிலைப் பட்டதாரி சேர்க்கைக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET-PG) வருகின்ற ஜூலை 2022 கடைசி வாரத்தில் நடைபெறும் என்று பல்கலைக் கழக மானியக்குழு (UGC) தலைவர் எம் ஜகதேஷ் குமார் அறிவித்துள்ளார். மேலும்,இத்தேர்வுக்கு தேசிய தேர்வு மையத்தின் அதிகாரப்பூர்வ https://nta.ac.in/ இணையதள பக்கத்தில் இன்று முதல் வருகின்ற ஜூன் 18 வரை … Read more

#Breaking:மக்களே உஷார்…மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா;ஒரே நாளில் இத்தனை பேருக்கு பாதிப்பா?..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,364 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு நாளில் 1,829 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 2,364 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,29,563 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 33 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆக குறைந்துள்ளது.மேலும்,இதுவரை மொத்த பலியானவர்களின் … Read more

அதிர்ச்சி…ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?..!

இந்தியாவில் கேசினோக்கள்,ஆன்லைன் விளையாட்டுக்கள் மற்றும் ஜிஎஸ்டியை விதிக்கும் குதிரை பந்தயம் ஆகிய விளையாட்டுக்களின்  சேவைகளை சிறந்த மதிப்பீடு செய்வதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில்,ஆன்லைன் விளையாட்டுக்கள்,குதிரைப் பந்தயம் மற்றும் கேசினோ போன்ற விளையாட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரியை 18% இருந்து 28% ஆக உயர்த்த மத்திய அரசுக்கு அமைச்சர்கள் குழு (ஜிஓஎம்) பரிந்துரைத்துள்ளது. இன்றும் ஓரிரு நாட்களில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில்,ஆன்லைன் விளையாட்டுக்கள்,ரேஸ் மற்றும் … Read more

#Breaking:சற்று முன்…இனி சிதம்பரம் கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி வழிபட அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக கொரோனா பெருந்தொற்று காரணமாக திருக்கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கு அரசால் வழங்கப்பட்ட அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்களிடமிருந்து பூஜை பொருட்களை பெறுதல், அமர்ந்து தரிசனம் செய்தல்,சாமிகளை தொட்டு தரிசனம் செய்தல் மற்றும் அங்கபிரதட்சனம் செய்தல் ஆகியவை தவிர்க்கப்பட்டு,கோயில் வளாகத்தில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர்.ஆனால்,தற்போது கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளதால் வழிப்பாட்டு … Read more

#Breaking:உஷார்…5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நாடு முழுவதும் கத்தரி வெயில் தொடங்கிய போதும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக லேசான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நேற்று 885 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 2,021 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால்,கே.ஆர்.பி. அணையில் இருந்து வினாடிக்கு 1,117 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக,கிருஷ்ணகிரி,விழுப்புரம்,கடலூர்,தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் … Read more

குட்நியூஸ்…3000 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு;ஊதியம்,இதர படிகள்- பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த 01.08.2021 அன்றைய நிலவரப்படி அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு இயக்குநரின் பொதுத் தொகுப்பிலிருந்து 3000 உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3000 ஆசிரியர்களுக்கு மேலும் 1 வருடம் பணியை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.குறிப்பாக,அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதன் காரணமாக ஆசிரியர்களின் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,3000 ஆசிரியர்களுக்கு ஊதியம்,மற்றும் இதர படிகளை வழங்கிடவும் … Read more

சற்று நேரத்தில்…தமிழகம் முழுவதும் வாயை வெள்ளை துணியால் கட்டி அறப்போராட்டம் – காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து,உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்,மக்கள் பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். ஆனால்,உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை எனவும்,அதே நேரத்தில்,குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்றும்,அவர்கள் நிரபராதிகள் அல்ல என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியிருந்தார்.மேலும்,இது தொடர்பாக … Read more

#TodayPrice:பெட்ரோல்,டீசல் விலையின் இன்றைய நிலவரம் இதுதான்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி,சென்னையில் இன்று 43-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94-க்கும் தொடர்ந்து அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல,டெல்லியில் பெட்ரோல் ரூ.105.41-க்கும்,டீசல் லிட்டருக்கு ரூ.96.67-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் ரூ.120.51,டீசல் லிட்டருக்கு ரூ.104.77-க்கு விற்பனை. … Read more