#Breaking:5 மணி நேரத்திற்கும் மேல்….இதனால்தான் சோதனை – காங்.MLA செல்வப்பெருந்தகை!

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான      ப. சிதம்பரத்தின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேசமயம்,அவரது மகனான கார்த்தி சிதம்பரத்தின் வீடு,அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2010 முதல் 2014 வரை சீனர்கள் இந்தியா வர சட்ட விரோதமாக சுமார் 250 விசாக்கள் வாங்கி பெற்று தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும்,கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் அளிக்கப்பட்டது குறித்தும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக,கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் காலை 7 மணி முதல் சோதனையிட்டு வரும் நிலையில்,5 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து சோதனை நடைபெறுகிறது.அதன்படி,சென்னை,மும்பையில் தலா 3 இடங்களிலும், பஞ்சாப், கர்நாடகா,ஒடிசாவில் தலா 1 இடங்கத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே,சிபிஐ ரெய்டு குறித்து கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள்? எத்தனை முறை சோதனை நடந்தது என்பதை நானே மறந்துவிட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளை காங்கிரஸ் மூத்த தலைவர் விமர்சிப்பதால் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக காங்.எம்எல்ஏ செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும்,இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை,வரம்பு மீறிய செயல் எனவும்,ஏற்கனவே அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகள் சோதனையிட்ட நிலையில்,இந்த சோதனை எதற்காகவென மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் செல்வப்பெருந்தகை கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Comment