அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு.. வரலாறு காணாத வகையில் சரிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் 77.73 ஆக சரிவை சந்தித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் 77.73 ஆக சரிவை கண்டுள்ளது. எண்ணெய் விலை ஏறக்குறைய 8 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 77.45 டாலராக இருந்தது. நாட்டின் மிகப்பெரிய ஐபிஓவான (IPO) அரசு நடத்தும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் பட்டியலிலேயே இந்திய பங்குச் சந்தைகள் சற்றே உயர்ந்து வர்த்தகம் செய்கின்றன.

இதனிடையே, சமீப காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே போகிறது. தற்போதைய பொருளாதார சூழலின் அடிப்படையில் மே மாத இறுதிக்குள் ரூபாய் மதிப்பு 78-ஐ தாண்டக் கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர். இந்திய பங்குச் சந்தைகளில் உள்ள பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உள்நாட்டு பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 736 புள்ளிகள் உயர்ந்து, 53,710 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 226 புலிகள் அதிகரித்து, 16,068 புள்ளிகளில் வர்த்தகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here