போனி கபூர் வெளியிட்ட சர்ப்ரைஸ் அப்டேட்.., குஷியில் அஜித் ரசிகர்கள்.!

வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் அடுத்ததாக மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார்.  படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்திற்கு தாற்காலிகமாக “AK61” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போனிகபூர் AK61 படத்தின் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். ஆம் , படத்தின் படப்பிடிப்பு ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் முடிந்துவிடும் என்றும் தீபாவளி அன்று படத்தை வெளியீட திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here