வாங்க வந்து இணைஞ்சிக்கொங்க கிரீன் சிக்னல் காட்டினார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை…!

சசிகலா மீதான அதிருப்தியால் அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணி பிரிந்து சென்றது. அப்போது சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என்று இரு அணிகளாக இருந்து வந்தன. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக்கப்பட்டு சசிகலா சிறை சென்றபிறகு சில எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டனர். இதையடுத்து தினகரன் அணி, முதல்வர் பழனிச்சாமி அணி என சசிகலா அணி இரண்டாக உடைந்தது. முதல்வர் பழனிச்சாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்த பிறகு தினகரன் அணி மட்டும் தற்போது தனித்து செயல்பட்டு … Read more

சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாற விரும்பும் மெட்ரிக் பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க தமிழக அரசு முடிவு…!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாற விரும்பும் மெட்ரிக் பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளி என மொத்தம் 58,000 பள்ளிகள் தமிழக பாடத்திட்டத்தில் செயல்படுகின்றன. கடந்த கல்வியாண்டுவரை தமிழகத்தில் 600 பள்ளிகள் மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் செயல்பட்டன. நீட் தேர்வு, ஜே.இ.இ நுழைவுத்தேர்வு போன்றவற்றை சிபிஎஸ்இ நடத்துவதால் பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாற மாநில அரசிடம் தடையில்லா … Read more

மூடநம்பிக்கை எதிர்ப்பு மசோதாவுக்கு ஓகே சொன்னது கர்நாடக அமைச்சரவை..!

மூடநம்பிக்கை எதிர்ப்பு மசோதாவுக்கு கர்நாடக மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து தரப்பினராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மசோதா, அடுத்து வரவுள்ள மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மனிதத் தன்மையற்ற தீய பழக்க வழக்கங்களை அழித்தொழிக்க இந்த மசோதா பெரிதும் உதவும் என்று கருதப்படுகிறது. நவம்பர் மாதம் நடைபெற உள்ள பேரவைக் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என கர்நாடக மாநில சட்ட அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு … Read more

முதலீட்டாளர் மாநாடு நடத்தலாமா..? முதல்வர் ஆலோசனை

சென்னை: உலக முதலீட்டாளர் மாநாடு நடத்துவது குறித்து, முதல்வர் பழனிசாமி தலைமையில், சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.தமிழக அரசு சார்பில், 2015 செப்டம்பரில், சென்னையில், உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது; 2018ல், உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பான, முதற்கட்ட ஆலோசனை கூட்டம், முதல்வர் தலைமையில், நேற்று, தலைமை செயலகத்தில் நடந்தது. துணை முதல்வர், பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, தலைமை செயலர், … Read more

இனி ஹெல்மெட் போட்டால்தான் பெட்ரோல்… அரசின் அதிரடி அரசாணை தயார்..!

அமராவதி : ஹெல்மெட் போட்டால் தான் இனி பெட்ரோல் கிடைக்கும் என்று அதிரடி அரசாணையை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிறப்பித்துள்ளார். சாலை பாதுகாப்பு விஷயங்களுக்கு மாநில அரசுகள் முனைப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனினும் இந்தியாவில் அதிகரித்து வரும் வாகன பயன்பாட்டிற்கு ஏற்ப சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. மது போதையில் வாகனம் ஓட்டுதல், குறிப்பிட்ட அளவை விட அதி வேகத்தில் ஓட்டும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆந்திர மாநில முதல்வர் … Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய விவசாயிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், திருவைகுண்டம் ஆகிய இடங்களில் இன்சூரன்ஸ் பணம் கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மறியல் நடைபெற்றது. இப்போராட்டத்தில் AIKS மாவட்ட செயலாளர் கே.பி.பெருமாள்,மாவட்ட நிர்வாகிகள் இராமசுப்பு,நம்பி ராஜன்,ஸ்ரீனிவாசன்,அப்பாக்குட்டி,ரவி சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆன்லைனில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய அரசு முடிவு – மத்திய அமைச்சர்

டெல்லி: ஆன்லைனில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் முறை விரைவில் தொடங்கப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: ஆன்லைனில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் முறை பரிசீலனையில் உள்ளது. விரைவில் இந்த திட்டம் தொடங்கப்படும். ஆன்லைனில் ஆர்டர் செய்தால், வீடு தேடி பெட்ரோல், டீசல் வரும். அதற்கான சட்டப்பூர்வ ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

தேசிய ஓபன் தடைகள போட்டியில் தமிழக வீரர், வீரங்கனைகள் தங்கம் வென்று சாதனை

சென்னை: நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தேசிய ஓபன் தடைகள போட்டியில் 10,000 மீட்டர் ஆடவர், மகளிர் பிரிவில் தமிழக வீரர், வீரங்கனைகள் தங்கம் வென்றுள்ளனர். ராணுவ அணி சார்பில் பங்கேற்க வீரர் லட்சுமணன் 10,000 மீட்டர் இலக்கை 26.16 நொடிகளிலும், வீராங்கனை சூர்யா 32.42 வினாடிகளிலும் இலக்கை அடைந்து தங்கம் வென்றுள்ளனர். அண்ணன், தங்கையான லட்சுமணன் மற்றும் சூர்யா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். 

பழனிச்சாமி தலைமையிலான அரசு நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது:நாஞ்சில் சம்பத்

முதல்வர் பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தபிறகாவது அதிமுக அரசு, மக்களுக்காக பணி செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நிலை மேலும் மோசமடைந்துள்ளது. ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதை மட்டுமே பிரதான பணியாக தற்போது தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர். தமிழகத்தில் இருக்கும் பிரச்னைகளை மறக்கடிக்கும் விதமாக ஜெயலலிதாவின் மரணம் குறித்த சர்ச்சையை கிளப்பிவிட்டு விவசாயிகள் தற்கொலை,கதிராமங்கலம், நெடுவாசல்,நீட் எதிர்ப்பு மற்றும் அனிதா மரணம் போன்ற  மற்ற அனைத்து விசையங்களையும் மழுங்கடித்துவிட்டனர். தினகரனின் எதிர்ப்பை மீறி … Read more

அரசாணை -92 அனைத்து கல்லூரிகளிலும் அமல்படுத்திடகோரி கண்டன ஆர்ப்பாட்டம்…!

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை குறைக்ககூடாது,அரசு மாணவர் விடுதிகளை முறையாக பராமரிக்க வேண்டியும்,அரசாணை -92ன்  கல்வி உதவித்தொகையை குறைக்க கூடாது மேலும் அதனை அனைத்து கல்லூரிகளிலும் அமல்படுத்திடகோரி  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் இந்திய மாணவர் சங்கம் (sfi) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுசெயலாளர் சாமுவேல் ராஜ் மற்றும் இந்திய மாணவர் சங்கதின் தென் சென்னை மாவட்ட செயலாளர் நிரூபன் உட்பட பலர் கலந்து … Read more