ஜெ.மரணம்: அமைச்சர் சி.வி. சண்முகத்தின் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு…! தமிழக பாஜக தலைவர் தமிழிசை

அமைச்சர் சி.வி. சண்முகத்தின் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு என்று   தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுங்கயில்,  ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்ற அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் .அமைச்சர் சி.வி. சண்முகத்தின் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. வெளிநாட்டுக்கு கொண்டு சென்று ஆஞ்சியோ செய்திருந்தால் சில அரசியல் அழுத்தங்களிலிருந்து விடுபட்டு ஜெயலலிதா சிகிச்சை பெற்றிருக்க முடியுமோ என்னவோ?…திருவாரூரில் மக்கள் … Read more

வங்கி கடன் செலுத்தலையா….? அப்ப இனி வெளிநாட்டுக்கு போக முடியாது….!!!

வங்கி கடனை செலுத்தாதவர்கள் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க கோர்ட் யோசனை வழங்கி உள்ளது. போலிபாஸ்போர்டில் வெளிநாடு சென்ற அங்கன்வாடி பணியாளர் பாணீக்கத்தை எதிர்த்த வழக்கில், கடன் பெற்றுவிட்டு வெளிநாடு தத்துவத்தை தடுக்க பாஸ்போர்ட்டை வங்கியில் ஒப்படைக்க சட்ட திருத்தம் தேவை என்றும், கடனை திருப்பி செலுத்தாவிட்டால் பாஸ்போர்ட்டை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

ஸ்டாலின் கிராம சபை கூட்டம் தோல்வி அடையும் …! மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

ஸ்டாலின் கிராம சபை கூட்டம் தோல்வி அடையும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை  கூறுகையில்,  பாஜகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை .ஸ்டாலின் ஏற்கனவே மக்களை தேடிச் சென்ற நிகழ்ச்சிகள் தோல்வி அடைந்ததைப் போல, கிராம சபை கூட்டமும் தோல்வி அடையும்   என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களுக்குள் பிளவு எதுவும் இல்லை …! அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர்களுக்குள் பிளவு எதுவும் இல்லை  என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,சசிகலாவின் குடும்பத்தினர் மருத்துவமனையில் தங்கியிருந்து சாப்பிட்டதால் தான் ரூ 1 கோடிக்கு மேல் செலவு வந்தது.மருத்துவமனையில் அமைச்சர்கள் யாரும் தங்கவில்லை, சசிகலா குடும்பத்தினர் மட்டுமே தங்கியிருந்தனர் .மருத்துவமனையில் அமைச்சர்கள் யாரும் தங்கவில்லை, சசிகலா குடும்பத்தினர் மட்டுமே தங்கியிருந்தனர் . அமைச்சர்களுக்குள் பிளவு எதுவும் இல்லை, ஏற்படுத்தவும் முடியாது.தமிழகத்திற்கு வந்த முதலீடுகள் திரும்ப பெறப்படவில்லை, இது குறித்து விளக்கத் தயார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ப்ளஸ் 2 படிப்பில் முக்கியப் பாடங்களுக்கு 2 புத்தகங்களுக்கு பதிலாக ஒரே புத்தகம் …!

ப்ளஸ் 2 படிப்பில் முக்கியப் பாடங்களுக்கு 2 புத்தகங்களுக்கு பதிலாக ஒரே புத்தகத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .தற்போது தமிழக  பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம்  ஒன்றை வெளியிட்டுள்ளது. ப்ளஸ் 2 படிப்பில் முக்கியப் பாடங்களுக்கு 2 புத்தகங்களுக்கு பதிலாக ஒரே புத்தகத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. வரும் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டத்துடன் ஒரே புத்தகமாக வழங்க பள்ளி கல்வித்துறை … Read more

இன்று முதல் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை…!மீறினால் ரூ 1,00,000 அபராதம்…!

இன்று முதல்  (ஜனவரி 1ஆம் தேதி)  14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட உள்ளது. சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தினை தடை விதிக்க தமிழக அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் வருகின்ற 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் சுற்றுசூழலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்க அரசு முடிவு செய்தது. அரசின் இந்த நடைமுறையினால் மக்காத பிளாஸ்டிக் தாள் , மக்காத பிளாஸ்டிக் தட்டு, மக்காத பிளாஸ்டிக் … Read more

மஜிலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்….!!!

நடிகை சமந்தா திருமணத்திற்கு பின்பு நடிக்கும் முதல் படம் மஜிலி. இந்த படத்தில் நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யா இருவரும் இணைந்து ஜோடியாக நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து ஜோடியாக நடிக்கும் முதல் படம் மஜிலி தான். இந்நிலையில் இயக்குனர் சிவா நிர்வானா தான் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நாளை தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூடுகிறது….!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை (ஜனவரி 2 ஆம் தேதி) கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் பேரவைக் கூட்டத்தொடர் நாளை (ஜனவரி 2ஆம் தேதி) காலை 10 மணிக்கு கூட உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தனது அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத்தொடரில் முதல் நாளில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்தி வைக்கப்படும். இந்த கூட்டத்தொடரில், மேகேதாட்டு விவகாரங்கள், ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட பிரச்சினைகள் … Read more

இன்று முதல் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணமில்லா பரிவர்த்தனை….!!

தமிழகம் முழுவதும் இன்று  (ஜனவரி 1-ம் தேதி )முதல் வாகன வரி செலுத்துதல், பெயர் மாற்றம் செய்தல், வாகனம் புதுபித்தல் போன்ற வாகனம் தொடர்பான அனைத்து பணிகளும் பணமில்லா பரிவர்த்தனை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. மனுதாரர்கள் நேரடியாக இணையதளம் மூலம் விண்ணப்பித்து பணிகளுக்கான கட்டணத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். இந்த சேவையை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள், அரசு பேருந்து ஓட்டுனர்கள், மினி பேருந்து உரிமையாளர்கள், உள்ளிட்டோருக்கு கணினி மூலம் விண்ணப்பம் செய்து பணம் கட்டுதல் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் … Read more