யார் சொன்னாலும் மார்பகங்களை பெரிசாக மாற்றாதீர்கள்!நான் அப்படி செய்தால் தற்கொலை செய்து விடுவேன்!படுகோனே பகீர் தகவல்

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளவர் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. இந்தியாவில் சூப்பர்ஸ்டார் களுக்கு இணையாக பேசப்படுபவர் தீபிகா படுகோனே.இவர் நடித்த பெரும் படங்கள் அனைத்தும் வசூலில் பெரும் சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில் அவர் சமீபத்தில் டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது கூறிய அவர் ஒரு காலத்தில் என்  மார்பகத்தை செயற்கையாக பெரியதாக மாற்ற பலர் என்னிடம் அறிவுரை கூறினார்கள்.அவ்வாறு செய்தால்தான் இந்திய சினிமாவில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் சான்ஸ் கிடைக்கும்.இல்லையென்றால் கிடைக்காது என்று … Read more

சென்னையில் கமல்ஹாசன் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்!

சென்னையில்  நடிகர்  கமல்ஹாசன் வீட்டில் மர்ம நபர் ஏறிக்குதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் இல்லம் சென்னையில் உள்ள ஆழ்வார் பேட்டையில் உள்ளது.நேற்று காலை மர்மநபர் ஒருவர் கமல்ஹாசன் வீட்டிற்கு வந்துள்ளார்.அங்கு வந்த அவர் கமல்ஹாசன் வீட்டு காவலாளியிடம் விசாரித்துள்ளார்.பின்னர் அவர் காவலரிடம் பேசியபடி கமல்ஹாசன் வீட்டின் சுவற்றில் ஏறி குதித்துள்ளார்.இதையறிந்த காவலாளி காவல் துறையினருக்கு புகார் அளித்தார். பின்னர் காவல்துறையின் விசாரணையில் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சவூதி அரேபியாவில் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு தளர்வு!

சவூதி அரேபியாவில் பெண்களுக்கு ஆடை அணிவதுக்கு இருந்த  கட்டுப்பாடு சற்று தளர்த்தப்பட்டுள்ளது. சவூதி அரேபியா பெண்களுக்கு அதிக அளவிலான கட்டுபாடுகளை விதித்து வந்தது.சமீபத்தில் தான் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதியளிக்கப்பட்டது.மேலும் திரையரங்கமும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது  சவூதி அரேபியாவில் பெண்களுக்கு ஆடை அணிவதுக்கு இருந்த  கட்டுப்பாடு சற்று தளர்த்தப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம்:கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு?

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் வருகின்ற ஜூலை மாதம் 2ஆம் தேதி நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு கர்நாடக அரசு தலைமையில் இன்று அனைத்து கட்சிக்கூட்டம் நடைபெறுகிறது.பெங்களூருவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் எம்பிக்கள்,எம்எல்ஏக்கள் மற்றும் எதிர்கட்சியினர் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக … Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு:மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி விசாரணை நடத்தப்பட்டது. நேற்று  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ் மற்றும் காவல்துறையினரிடம் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணைய துணைத்தலைவர் முருகன் முன்னிலையில் நேரில் விசாரணைக்கு ஆஜராகினர். இது குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் கூறுகையில்,தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஆட்சியர், காவல் துறையினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.இது குறித்த விசாரணை அறிக்கை குடியரசு தலைவரிடம் … Read more

சேலம் 8 வழிச்சாலை:முழுக்க முழுக்க மத்திய அரசுதான் திட்டத்திற்கு காரணம்!முதலமைச்சர் பழனிசாமி

சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு  நிலம் வழங்குபவர்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தருவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் தாது வளங்களை வெட்டி எடுக்கும் தனியாருக்கு சாதகமான திட்டமா என்ற கேள்வி கற்பனையானது.சேலம் 8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம், திட்டத்திற்கு தமிழக அரசு உதவுகிறது. 8 வழிச்சாலை அமைந்தால் விபத்துகள் குறைந்து, உயிரிழப்பு குறையும்.8வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகும்.நில உரிமையாளர்களுக்கு தேவையான இழப்பீடு பெற்றுத் தரப்படும். நிலத்தை திட்டத்திற்கு … Read more

வைகோ  மீது சில தீய சக்திகள் குறி வைத்துள்ளார்கள்!மதிமுக  துணை பொதுசெயலாளர் மல்லை.சத்யா

வைகோ  மீது சில தீய சக்திகள் குறி வைத்துள்ளார்கள் என்று மதிமுக  துணை பொதுசெயலாளர் மல்லை.சத்யா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் மதிமுக மேற்கு மாவட்ட பொதுஉறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் கூறுகையில்,வைகோ  மீது சில தீய சக்திகள் குறி வைத்துள்ளார்கள். காவல்துறையும், இந்திய அரசும் அவரை பாதுகாக்கும் என நாம்புவது நம்மை நாமே ஏமாற்றி கொள்வதாக அமையும். நாம் தான் நம் தலைவர்களை பாதுக்காத்திட வேண்டும். நம் தலைவர்கள் தான் நமக்கான அடையாளங்கள். நம் தலைவர்களை பாதுகாத்திட தற்கொலை … Read more

மதுரையில் ஜூலை 2 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை !மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்

ஜூலை 2 முதல் மதுரையிலுள்ள அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் தொடங்க அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படும்.ஜூலை 2 முதல் மதுரையிலுள்ள அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகாவில் குமாரசாமி அரசு பதவியேற்கும் விழாவிற்கு வந்த அனைவரும் கூட்டணியில் இணைவார்கள் என எண்ணிவிட வேண்டாம்! தேவகவுடா

கர்நாடகாவில் குமாரசாமி அரசு பதவியேற்கும் விழாவிற்கு வந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கூட்டணியில் இணைவார்கள் என எண்ணிவிட வேண்டாம் என்று மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித்தலைவர்  தேவகவுடா தெரிவித்துள்ளார். முன்னதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பதவி ஏற்பு விழாவிற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா,ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு,கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதனால் பலர் இது கூட்டணிக்கான அரசியல் என்று நினைத்தனர்.ஆனால் தற்போது கர்நாடகாவில் குமாரசாமி அரசு பதவியேற்கும் விழாவிற்கு வந்த அரசியல் … Read more

நாகப்பட்டினத்தில் மீனவர்கள் சுமார் 500 பேர் 2வது நாளாக கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தம்!

நாகை பழையாறு மீனவர்கள் சுமார் 500 பேர் 2வது நாளாக கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் பழையாறு பகுதியில் மீனவர்கள் சுமார் 500 பேர் 2வது நாளாக கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.சுருக்குவலை, இரட்டை மடிவலை, இழுவை வலை, அதிவேக சீன என்ஜின்களை தடை செய்ய கோரிக்கை மீனவர்கள் வேலைநிறுத்ததால் 180 விசைப்படகுகள் 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.