பிகில் திரைப்படத்தில் நடிக்க எவ்வளவு சந்தோஷம் அடைந்தேனோ..!அதே சந்தோஷம் இன்று உங்களை சந்தித்தபோது -இந்துஜா..!

உதவும் உள்ளங்கள் என்ற தொண்டு நிறுவனம் ஆண்டுதோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று சேர்த்து ஆனந்த தீபாவளி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் நடந்த ஆனந்த தீபாவளி நிகழ்ச்சியில் 1222 குழந்தைகள கலந்து கொண்டனர். நேற்று நடந்த இந்நிகழ்ச்சியில்  நடிகை இந்துஜா, அதுல்யா ரவி இருவரும் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்துஜா விஜய் நடித்த பிகில் படம் வெளியாக உள்ளது.இப்படத்தில் நடிப்பதற்கு என்னை நடிக்க கூப்பிட்டபோது ” நான் எவ்வளவு … Read more

கமலுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட சாண்டியின் முன்னாள் மனைவி!

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், சாண்டி மாஸ்டரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சாண்டி தனது முதல் மனைவியான காஜல் பசுபதியை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துள்ளார். இந்நிலையில், காஜல் … Read more

தமிழ் சினிமா தற்போது ஒரு இக்கட்டான சூழலில் இருக்கிறது : நாசர்

நடிகர் நாசர் தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட நடிகராவார். இவர் பல படங்களை இயக்கியுக்கியும், நடித்தும் உள்ளார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும்  மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக உள்ளார். இவர் தென்னிந்திய காஸ்டிங் டைரக்ட்டர் மற்றும் செலிபிரட்டி மேனேஜர்ஸ் கூட்டமைப்பின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ் சினிமாவிற்கு தற்போது முக்கியமாக, திறமையும், அடிப்படை பயிற்சியும் தேவை என்றும், தமிழ் சினிமா … Read more

நடிகர் சிம்பு மீண்டும் மாநாடு படத்தில் நடிக்கிறார?

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்ததன் மூலம் நாயகனாக அறிமுகமானார். மேலும், இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவிருந்த மாநாடு திரைப்படம் சிம்புவின் அலட்சியத்தால் கைவிடப்பட்டது. இதனையடுத்து, சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் … Read more

பிக்பாஸ் வீட்டில் பயன்படுத்திய துணிகளை விற்கும் மும்தாஜ் ! காரணம் என்ன ?

மும்தாஜ், ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் இந்திய மாடல் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் முதன்மை நடிகையாக நடித்துள்ளார். மேலும் இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் மோனிஷா என் மோனாலிசா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார். இதன் பின் குஷி, சாக்லேட் போன்ற வெற்றி நடித்துள்ளார். பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பாக் பாஸ் 2 என்ற தமிழ் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். தற்போது இவர் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பயன்படுத்திய … Read more

தீபாவளியை முன்னிட்டு நடிகை சமந்தாவின் அட்டகாசமான பதிவு!

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை சமந்தா தனது செல்லப்பிராணியான நாய்குட்டியுடன் இணைந்து  புகைப்பதற்கு வெளியிட்டு, தீபாவளியன்று அதிக சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகளை  வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. … Read more

எனக்கு பணம் முக்கியம் இல்லை! நல்ல நடிகை என்று நிரூபித்த பிறகு தான் பணத்தை பற்றி யோசிப்பேன் : நடிகை டாப்ஸி

நடிகை டாப்ஸி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இந்தியில் நடித்துள்ள படங்களுக்கு இவருக்கு நல்ல வசூல் வந்துள்ளது. இதனால் இவருக்கு பட வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘சமீப காலமாக சினிமா துறையில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு கொடுக்கிற சம்பளமும் அதிகரித்துள்ளது. இது வரவேற்க்கத்தக்க மாற்றம் தான் என கூறியுள்ளார். மேலும் அவர் … Read more

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ்-க்கு கௌரவ "டாக்டர்" பட்டம் !

டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் சார்பில் வருகின்ற அக். 20ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சிலருக்கு கௌரவ ‘டாக்டர்’ பட்டம் வழங்கப்படவுள்ளதாக பல்கலைக் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் எம்.பி-யுமான ஏ.சி சண்முகம் அறிவித்திருந்தார். அதன்படி 20ம் தேதி டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழக சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டி.ஆர்.டி.ஓ தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி, கங்கா மருத்துவமனை தலைவர் எஸ்.ராஜசபாபதி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகையும், … Read more

பச்சை நிற புடவையில் பக்காவான புகைப்படத்தை வெளியிட்ட அடுத்த சாட்டை பட நடிகை!

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஏமாளி, நாகேஷ் திரையரங்கம் போன்ற படங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் சமுத்திரகனியின் அடுத்த சாட்டை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், பச்சை நிற புடவையில் எடுத்த பக்காவான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ … Read more

வித்தியாசமான கதாபத்திரத்தில் களமிறங்கும் சேரன்!

இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும், இயக்குனரும் ஆவார். இவர் தற்போது இயக்குனர் சாய் ராஜ்குமார் இயக்கத்தில், ராஜாவுக்கு செக் என்ற படத்தில் சேரன் நடித்து வருகிறார். இப்படத்தில் சிருஷ்டி டாங்கே, சரயூ மோகன், நந்தனா வர்மா, இர்பான் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் குறித்து இயக்குனர் சாய் ராஜ்குமார் அவர்கள் கூறுகையில், இப்படத்தில் சேரன் ‘க்ளைன் லிவிங் சிண்ட்ரோ’ என்ற நோயால் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ளார். எந்த நேரத்திலும் அவர் தூங்கி விடுவார். இந்த தூக்கம் … Read more