நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் மறுதேர்தல்.. தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

nota vote

NOTA votes: நோட்டா வாக்குகள் அதிகம் பதிவாகும் இடங்களில் அந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு. ஒரு நாட்டின் குடிமகன் வாக்களிப்பது என்பது ஒரு முக்கிய ஜனநாயக கடமையாகும். ஆனால் இதுவரை நடந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குகள் பதிவானதாக சரித்திரம் இல்லை. இதனால் வாக்களிக்க தகுதியுடையவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே அரசியல் கட்சியை சாராதவர்கள், அரசியல் மீதும் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் மீதும் நம்பிக்கை இல்லாதவர்கள், … Read more

கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்? 170 செல்போன்கள்… உச்சநீதிமன்றத்தில் ED பகிர் தகவல்!

Arvind Kejriwal

Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து கடந்தாண்டு டெல்லி முன்னாள் துணை முதல் மணீஷ் சிசோடியவை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. இதையடுத்து அந்த வழக்கு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். … Read more

ஒப்புகை சீட்டு வழக்கு – தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!

EVM Machine

supreme court: ஒப்புகை சீட்டுகளை எண்ணக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மக்களவை தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை 100% எண்ணக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை, விவிபாட் இயந்திரங்களின் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளுடன் 100 சதவீதம் ஒப்பிட்டு எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடைபெறலாம் என … Read more

காசர்கோடு விவகாரம்! இது உண்மைக்கு புறம்பானது.. இந்திய தலைமை தேர்தல் ஆணையம்!

election commission

Election2024: மின்னணு வாக்கு இயந்திரத்தில் பாஜகவுக்கு கூடுதல் வாக்கு விழுவதாக எழுந்த புகாருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு. கேரளா மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதியில் வரும் 22ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் காசர்கோடு மக்களவை தொகுதியில் நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது நான்கு மின்னணு இயந்திரத்தில் தவறு இருப்பதாகவும், அந்த இயந்திரங்களில் உள்ள தாமரை சின்னம் பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஒட்டு விழுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றசாட்டினர். … Read more

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு.! அரசியல் கட்சியினர் அதிர்ச்சி..!

evm

Election2024: கேரளாவில் மாதிரி வாக்குபதிவின்போது மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஒட்டுகள் விழுந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாளை முதல் தொடங்க உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் உள்ள 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை தொடங்கும் மக்களவை தேர்தல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் … Read more

மீண்டும் வாக்குச்சீட்டு நடைமுறை என்பது சாத்தியமற்றது… உச்சநீதிமன்றம்!

SUPREME COURT

Supreme court: மீண்டும் வாக்கு சீட்டு முறையை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி தமிழகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே மத்தியில் யார் ஆட்சி அமைக்கிறார்கள் என தெரிந்துவிடும். இதனிடையே, மின்னணு வாக்கு இயந்திரம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்த வண்ண இருந்த … Read more

எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் ஏற்க முடியாது… ராம்தேவுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை!

Baba Ramdev

Supreme Court: பதஞ்சலி விளம்பரம் விவகாரத்தில் பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம். பதஞ்சலி நிறுவனம் தாங்கள் கண்டுபிடித்த மருந்து குறித்த தவறான விளம்பரங்களை மேற்கொண்டதற்காக அந்நிறுவனத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது, கொரோனா காலத்தில்  அலோபதி மருத்துவ முறையை தவறாக சித்தரித்து விளம்பரம் வெளியிட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணையை நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அஹ்சானுதீன் ஆகியோர் அடங்கிய அமர்வு நடத்தி வருகிறது. அந்தவகையில், பதஞ்சலியின் தவறான … Read more

அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

Arvind Kejriwal

Arvind Kejriwal: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு. கடந்த மாதம் மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றம் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அமலாக்கத்துறை கைது சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அமலாக்கத்துறை மற்றும் கெஜ்ரிவால் தரப்பில் வாதங்கள் … Read more

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு… உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.!

i periyasamy

Supreme Court: அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். கடந்த 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை அந்த துறையை சார்ந்த அமைச்சர் ஐ.பெரியசாமி முறைகேடாக  ஒதுக்கியதாக புகாா் எழுந்தது. இதன்பின் கடந்த 2012 அதிமுக ஆட்சியில் ஐ.பெரியசாமிக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமிக்கு எதிரான … Read more

அமைச்சர் ஐ பெரியசாமி தொடர்ந்த மனு – உச்சநீதிமன்றம் முக்கிய அறிவிப்பு

I PERIYASAMY

Supreme court: உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ பெரியசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு 8ம் தேதி விசாரணை. வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ பெரியசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 8ம் தேதி திங்கட்கிழமை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இருந்து ஐ பெரியசாமியை விசாரணை நீதிமன்றம் விடுவித்த … Read more