சுபஸ்ரீ மரணம் அடைந்ததை அடுத்து ட்விட்டரில் ட்ரெண்டாகும் #WhoKilledShubashree

ட்விட்டரில் சுபஸ்ரீ மரணம் அடைந்ததை அடுத்து #WhoKilledShubashree என்ற ஹாஸ் டேக் ட்ரெண்டாகி வருகின்றது. சுபஸ்ரீ என்ற 23 வயது பெண் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.நேற்று மாலை தனது பணியினை முடித்து கொண்டு  வந்திருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கரணை அருகே வந்துகொண்டிருந்தார்.அந்த சமயத்தில் ரெடியல் சாலை வழியே வந்தபோது  அதிமுக சார்பில் சாலையின்  நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்தது.இதனால் சுபஸ்ரீ நிலைதடுமாறி கீழே … Read more

சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இடைக்கால நிவாரணம்-நீதிமன்றம் உத்தரவு

பேனர் சாய்ந்து விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் நேற்று சுபஸ்ரீ என்ற இளம்பெண் தனது பைக்கில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.ஆனால் அவர் பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது.இதனால் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் இது தொடர்பான வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.விசாரணையில் நீதிமன்றம் சரமாரியாக … Read more

அனுமதியின்றி பேனர் வைப்பதற்கு தடை!மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை!புதுவை முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் பேனர் வைக்க தடை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னையில் பள்ளிக்கரணை அருகே திருமண நிகழ்ச்சிக்காக அதிமுக பிரமுகர் சார்பில் சாலையின் நடுவே பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.அந்த சமயத்தில் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் சுபஸ்ரீ  மீது  பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.இதன் பின் அங்கு வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியது.இந்த விபத்தில் சுபஸ்ரீ  பரிதாபமாக உயிரிழந்தார்.இதற்கு பல தரப்பு மக்களும் … Read more

பேனர் வைப்பதை நிறுத்துங்கள் !அதிமுகவினருக்கு பன்னீர்செல்வம், பழனிசாமி வேண்டுகோள்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர், கட் அவுட் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அதிமுகவினருக்கு பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளனர். பேனர் மேலே விழுந்து சென்னையில் இளம்பெண் ஒருவர் மரணம் அடைந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்திற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.   மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் அறிக்கை. கழக நிர்வாகிகளுக்கும், உடன்பிறப்புகளுக்கும் அன்பு வேண்டுகோள் ! pic.twitter.com/ig5rpSXfrv … Read more

பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்கும் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளமாட்டேன்-மு.க.ஸ்டாலின் அறிக்கை

பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்கும் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளமாட்டேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இது தொடர்பான விசாரணையில் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், திமுக நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிக்கும் இடையூறு … Read more

இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவை? உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

சென்னையில் பேனர் மேலே விழுந்ததில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பேனர் விவகாரத்தில்  தமிழக அரசு மீது டிராபிக் ராமசாமி  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றம்.அந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் சிந்த வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் ? சுபஸ்ரீயை இழந்து நிற்கும் பெற்றோருக்கு அரசு என்ன செய்யப்போகிறது? பேனர் வைத்து அழைத்தால்தான் அரசியல்வாதிகள் வருவார்களா? மேலும் குற்றம் நடக்க … Read more

பேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகளின் மெத்தனமே காரணம் : சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுக பேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ மரணம் அடைய அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.அப்போது உயர்நீதிமன்றம் தரப்பில் கருத்து கூறுகையில்,அதிமுக பேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ மரணம் அடைய அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம்.அதிகாரிகள் அரசியல் கட்சியினருக்கே விசுவாசமாக செயல்படுகின்றனர். இது போன்ற விபத்துக்கு ரூ 2 லட்சம் நிவாரணம் கொடுத்துவிட்டு, உத்தரவை மீண்டும் மதிக்காமல் … Read more

பேனரால் இளம்பெண் பலி -அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு

சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பள்ளிக்கரணை அருகே திருமண நிகழ்ச்சிக்காக அதிமுக பிரமுகர் சார்பில் சாலையின் நடுவே பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.அந்த சமயத்தில் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் சுபஸ்ரீ  மீது  பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.இதன் பின் அங்கு வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியது.இந்த விபத்தில் சுபஸ்ரீ  பரிதாபமாக உயிரிழந்தார்.இவர் குரோம்பேட்டையை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more